இன்னும் ஒரு வாரத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும்  என்றும், அதனால் தமிழகம் மற்றும் புதுவையில நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை வல்லுநர்கள் தெரிவித்து  உள்ளனர். 

தமிழகத்தில் இந்த முறை பரவலாக மழை பெய்து வந்துள்ளதால், பல்வேறு அணைகள் நிரம்பி உள்ளது, எனவே விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர், இந்த நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை தொடரும் என்றும், அடுத்த வார இறுதிகள் மழை தீவிரம் அடைய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நல்ல மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது என்றும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரையில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியசும் குறைந்த பட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசும் பதிவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு வெதர்மேன் தெரிவிக்கும்போது நவம்பர் மாத இறுதி அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் தமிழகத்திற்கு நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளார். தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக செண்பகத்தோப்பு வனப்பகுதியில் நல்ல வெள்ளம் பெருக்கெடுத்து வருகிறது. இதன் காரணமாக அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக செய்த மழையில் தமிழகத்தின் பல்வேறு அணைகளில் நீர் நிரம்பி இருப்பதாலும், விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கப்பெற்றதாலும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் அடுத்த வார இறுதிக்குள் அல்லது டிசம்பர் மாத முதல் வாரத்தில் தமிழகத்திற்கு நல்ல மழை கிடைக்கும் என்ற செய்தி விவசாய பெருமக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.