ரூ.69 இல் அதிரடி சலுகையை அறிவித்த வோடபோன்..!  வாடிக்கையாளர்கள் குஷியோ குஷி...! 

வோடபோன் நிறுவனம் தங்களுடைய ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மாபெரும் சலுகையை அறிவித்து உள்ளதால் பெரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

அதன்படி ரூபாய் 69 இல் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது வோடபோன். இதற்கு முன்னதாக ரூ.35, ரூ.65, ரூ.95, ரூ.145, ரூ. 245 விலையில் பல சலுகைகளை வழங்கி வருகிறது. இதனுடன் தற்போது ரூபாய் 69 இல் புதிய சலுகையை அறிவித்து உள்ளது.

இதன் காரணமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த ரூபாய் 65 காண சலுகையை நீக்கியுள்ளது வோடபோன். இந்த புதிய திட்டத்தில் வாய்ஸ் கால் சேவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.மேலும் 150 லோக்கல், எஸ்டிடி கால்ஸ். 250 ஜிபி,4 ஜிபி,100 எஸ்எம்எஸ் என நிறையசலுகையை இந்த திட்டத்தின் மூலம் பெற முடியும் 

இந்த புதிய சலுகையின் மூலம் 28 நாட்கள் முதல் 84 நாட்கள் வரை சலுகை காலவரையை நிர்ணயித்துக்கொள்ளலாம். ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, பீகார், ஜார்கண்ட், டெல்லி உள்ளிட்ட இடங்களில் முதற்கட்டமாக இந்த சலுகையை அறிவித்து உள்ளது.பின்னர் படிப்படியாக மற்ற மாநிலங்களில் இந்த சலுகையை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.