விநாயகர் சதுர்த்தி என்றாலே கண்டிப்பாக கொழுக்கட்டை இல்லாமலா...  விநாயகருக்கு கொழுக்கட்டை பிடிக்கும் என, பலரும் பால் கொழுக்கட்டை, பிடி கொழுக்கட்டை, கார கொழுக்கட்டை, பூரணம் வைத்த கொழுக்கட்டை என விதவிதமாக செய்து வைத்து படைப்பார்கள். 

இதில், தித்திப்பு சாப்பிட விரும்பாதவர்கள்... மிகவும் ஈஸியா மணி கொழுக்கட்டை எனப்படும் கார கொழுக்கட்டை செய்யலாம் சரி, எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க.

1 கப் அரிசி ஊறவைத்து கொள்ளுங்கள். 3 மணி நேரத்திற்கு பின் அரிசி ஊறியதும், அதனை மிக்சியில் மாவுபோல் மழமழவென்று அரைக்காமல், சற்று கொரகொரப்பாக அரைத்து கொள்ளுங்கள். இது தான் சரியான பதம்... கொழுக்கட்டை சாப்பிடுவதற்கும் மாவு சற்று கொரகொரப்பாக இருந்தால் தான் நன்றாக இருக்கும்.

மாவு தயாரான பின், ஒரு பெரிய கடாயில், 1 ஸ்பூன் எண்ணெய் மற்றும் ஊற்றி... நீங்கள் அரைத்து வைத்த மாவை கடையில் கொஞ்சம் இறுகிய தன்மை வரும் வரை வாட்டுங்கள். இதனால் மாவும் சற்றும் வெந்து விடும். 

பின்னர் இந்த மாவை தனியாக எடுத்து வைத்து கொண்டு, காடாயில், 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றில், எண்ணெய் சூடாகிய பின், அதில் சிறிது கடுகு உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கருவேப்பில்லை, காய்ந்த மிளகாய், ஆகியவை சேர்த்து நன்கு வரு பட்டதும், 1 /4 கப் தேங்காய் துருவலை அதில் கொட்டி இரண்டு வதக்கு வதக்கி நீங்கள் தயார் செய்துள்ளதை மாவில் கொட்டி பிசைந்து கொள்ளுங்கள்.

மாவை உங்களுக்கு பிடித்த போல் சிறு சிறு உருடைகளாக பிடித்து, இட்லி பானையிலோ அல்லது இட்லி குக்கரிலோ வேகவைத்து எடுத்தால்... சூப்பரான கார கொழுக்கட்டை ரெடி.

இந்த முறை விநாயகர் சதுர்த்தியன்று உங்கள் வீட்டில் இந்த ரெசிபியை செய்து அசத்துங்கள்