குக் வித் கோமாளி புகழின் காதலி இப்படி பட்டவரா...? மனம் திறந்து அவரே சொன்ன 5 வருட காதல் கதை..!!

விஜய் டிவியின் குக் வித் கோமாளி புகழ், தன்னுடைய காதலியை பற்றி சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த செய்தி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

Vijay TV cook with comali pugazh love story

விஜய் டிவியின் குக் வித் கோமாளி புகழ், தன்னுடைய காதலியை பற்றி சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த செய்தி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

குக் வித் கோமாளி புகழ், விஜய் டிவி-யில் ஒளிபரப்பான “சிரிப்புடா” என்ற நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலம் 2016-ஆம் ஆண்டு தனது பயணத்தை துவங்கினார். இருப்பினும், "குக் வித் கோமாளி" நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, அவருக்கு பெரும் புகழ் கிடைத்தது. அதிலும், "குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாம் பாகத்தின் மாபெரும் வெற்றி, அவரை வேற லெவலுக்கு கொண்டு சென்றது. குறிப்பாக, அதில், அவரின் ரொமான்டிக் நகைச்சுவை இளசுகளை கொள்ளை கொண்டது. எங்கு சென்றாலும் அவரை ரசிகர் பட்டாளம் சூழ்ந்து கொண்டு கொண்டாடுவார்கள்.

Vijay TV cook with comali pugazh love story

அதன்பிறகு, விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ’காமெடி ராஜா கலக்கல் ராணி’ நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட புகழ் சினிமாவில் நடித்து வருவதால், நேர பிரச்னை காரணமாக அதிலிருந்து விலகினார். இதையடுத்து புகழ், அஜித்தின் வலிமை, அருண் விஜய்யின் யானை உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். 

இதைத்தொடர்ந்து, தற்போது விஜய் டிவி-யின் குக் வித் கோமாளி சீசன் 3- வெளியாகி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இதில், முதல் இரண்டு நிகழ்ச்சிகளில், புகழை தவிர மற்ற அனைத்து கோமாளிகளும் இடம் பெற்றிருந்தனர். இதனால் இந்த சீசனில் புகழ் கலந்துக் கொள்ள மாட்டாரா என சோகத்தில் ஆழ்ந்தனர் ரசிகர்கள்.

இந்நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது வாரத்தில் புகழ் மாஸ் என்ட்ரி கொடுத்தார். அவ்வளவுதான் குக் வித் கோமாளி நிகழ்ச்சி களைகட்டியது. அப்போது, வெங்கடேஷ் பட் சார் புகழை பார்த்து சில கேள்விகளை எழுப்பினர். அதற்கு புகழ் மனம் திறந்து பதில் அளித்துள்ளார்.

புகழ், சமீபத்தில் தன்னுடைய காதலியின் பிறந்த நாள் விழாவை தன்னுடைய நெருங்கிய நண்பர்களுடன் சேர்ந்து கிராண்டாக ஹோட்டலில் கொண்டாடியிருந்தார். அந்த பிறந்த நாள் கொண்டாட்ட வீடியோவை  புகழ் தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து, அவரே தன்னுடைய காதலை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

Vijay TV cook with comali pugazh love story


 
புகழ் அந்த நிகழ்ச்சியில், இனிமேல் எந்த பெண்ணிடமும், காதல் வலை வீசக்கூடாது என்ற கேள்விக்கு, தன்னுடைய காதலி எனக்கு மிகவும் சப்போட்டாக இருப்பதாவும், அவர் நிகழ்ச்சியில் எனக்கு பெண்களிடம் ஜாலியாக பேச, அனுமதி வழங்கியுள்ளார் என தெரிவித்தார்.

முதன் முதலில் தன்னுடைய காதலியை:

புகழ் ஐந்து வருடங்களுக்கு முன்பு கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் ஆடிஷனுக்காகக் கோயம்புத்தூருக்குச் சென்றிருக்கிறார். அப்போது கோயம்புத்தூரில் தான் முதன் முதலில் தன்னுடைய காதலியை முதல்முறையாகச் சந்தித்தாராம்.

Vijay TV cook with comali pugazh love story

முதல் சந்திப்பிலேயே இருவருக்கும் இடையே ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. முதல் சந்திப்பிலேயே ஒருவர் மீது ஒருவருக்கு ஈர்ப்பு ஏற்பட இருவருக்குமிடையே உரையாடல் தொடர்ந்திருக்கின்றன.

அதன்பின் சாட்டிங், போன் கால் உரையாடல்கள், நேரில் சந்தித்துக் கொள்வது என இருந்த புகழ் இந்த காதலை தன்னுடைய நெருங்கிய நண்பர்களான மணிமேகலை போன்ற ஒரு சிலரைத் தவிர்த்து மற்ற யாருக்குமே தெரியாமல் ரகசியமாகவே வைத்திருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios