அன்று "பணமதிப்பிழப்புக்கு"....இன்று "பிகிலுக்கு"...கொட்டும் மழையில் தாய் நாட்டை காக்க..!காலம் சொல்லும் பாடம்...!  

கறுப்பு பண புழக்கத்தை ஒழிக்கும் விதமாக பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்வவதாக கடந்த 2016 நவம்பர் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திடீர் அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஒரு தருணத்தை யாராலும் மறந்திருக்க முடியாது.

அப்போது மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் கையில் வைத்திருந்த 500 மற்றும் 1000 ரூபாயை வங்கியில் கொடுத்து மாற்ற காத்திருந்த காலம் நினைவுக்கு வரும். அந்த ஒரு  தருணத்தில் தமிழகத்தில் திமுக மற்றும் தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். மேலும் பழைய ரூபாய் நோட்டை வங்கியில் கொடுத்து மாற்றுவதற்காக ஒவ்வொரு நாளும் வெயில் மழை என்று பாராமல் நீண்ட வரிசையில் காத்திருந்த போது அதனை மேற்கோள்காட்டி எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனத்தை முன்வைத்தனர். அந்த காட்சிகள் அனைத்தும் அனைவர் மனதிலும் இன்றளவும் நிலைத்து நிற்கின்றது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க... 

தற்போது தமிழகத்தில் நாளை மறுதினம் 25ஆம் தேதி, விஜய் நடித்து வெளியாக உள்ள பிகில் படத்திற்கு அவர்கள் ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பையும்,எதிர்ப்பார்ப்பையும் கிளப்பி உள்ளது. அதற்கு முன்கூட்டியே டிக்கெட் புக் செய்வதற்காக நேற்று அம்பத்தூரில் உள்ள திரையரங்கு முன்பாக நீண்ட வரிசையில் இளைஞர்கள் காத்திருந்து டிக்கெட்டை பெற்று சென்றனர்.

இதனை பார்க்கும்போது தமிழக மக்களுக்கு சினிமா மோகம் எந்த அளவிற்கு உள்ளது என்றும் குறிப்பாக இளைஞர்கள் ஒரு குறிப்பிட்ட ஹீரோவிற்கு எந்த அளவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள் என்பதையும் எடுத்துரைக்கிறது. ஆனால் பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தபோது அன்றைய தினத்தில் வங்கியில் பணத்தை கொடுத்து மாற்றுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தவர்கள் கூட  இன்று அதே நீண்ட வரிசையில் காத்திருந்து பட டிக்கெட்டை   பெறுவதற்காக பல மணி நேரம் காத்திருக்கின்றனர் என்பதை நினைக்கும் போது இந்தியா ஸ்ட்ரைட்டா வல்லரசு தான் போங்க என மன குமுறலை ஏற்படுத்தும்.

இதில் குறிப்பாக கொட்டும் மழை என்றும் பாராமல் பல மணி நேரம் நீண்ட வரிசையில்  காத்திருந்து டிக்கெட் முன்பதிவு செய்யும்  காட்சி அனைவரையும் ஒரு வித யோசனையில்  ஆழ்த்தி உள்ளது