திருப்பதி கோவில் வாசலில் விக்னேஷ் சிவனுடன் - நயன்தாரா..! முக்கிய முடிவு..? 

நடிகை நயன்தாராவிற்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது என்ற செய்தி பரவலாக பகிரப்பட்டு வருகிறது. 

அந்த ஒரு தருணத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அவ்வவ்போது வெளிநாடுகளுக்கு சென்று மகிழ்ச்சியாக சில நாட்களை கழிப்பது, அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களின் ஆதரவையும் எண்ணற்ற கேள்விக்கும் ஆளாவார்கள். இப்படி ஒரு தருணத்தில் நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் இருவரும் விரைவில் திருமணம் செய்துக்கொள்ளப்போகிறார்கள் என்ற செய்தியும் பார்த்து இருப்போம். 

ஏற்கனவே இந்த ஆண்டு இறுதிக்குள் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் திருமணம் நடைபெறும் என பேசப்பட்டு இருந்தது. இந்த ஒரு தருணத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து உள்ளனர். அவர்களுக்கு ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் மரியாதை செய்து பிரசாதங்களை வழங்கியுள்ளனர்.

பின்னர் கோவிலுக்கு வெளியே வந்த நயன்தாராவை பார்த்த ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு அவருடன் செல்பி எடுக்க முயன்றுள்ளனர். அதற்கு சிரித்தபடியே நயன்தாராவும் தன்னுடைய ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் கோவிலுக்கு சென்று உள்ள இந்த புகைப்படம் தற்போது இவர்களின் திருமணத்தை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது என பல்வேறு தரப்பினர் கருத்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.