பழைய வாழ்க்கை முறைக்கு மாறி வரும் நாம், இதனையும் இனி வரவேற்கலாம். அதாவது , வெட்டிவேர் செருப்பு...
அது என்ன வெட்டிவேர் செருப்பு ?
இந்த வெட்டிவேரானது மணற்பாங்கான இடங்களிலும், ஆற்றுப் படுகைகளிலும் வளமாக வளரும் தன்மை கொண்டது. இது நான்கு முதல் ஐந்து அடி உயரம் வரை வளரும். வேர் கொத்துக் கொத்தாக இருக்கும். இதன் வேரை வெட்டி எடுத்த பின் புல்லையும் வேரையும் வெட்டி நடுவில் உள்ள துண்டை மீண்டும் நட முடியும் சிறந்த மருத்துவ குணமுடையதுதான் வெட்டிவேர்.....
பல மருத்துவ குணமுடைய இந்த வெட்டிவேரை பயன்படுத்தி, தற்போது காலணிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
கோடியில் செலவு செய்து , டைமண்ட் செருப்பு வாங்கி பயன்படுத்தினாலும், கோடியான நன்மைகள் இந்த வெட்டிவேரில் உள்ளது என்பது தான் நிகர்சனமான உண்மை.........
வெட்டிவேர் செருப்பின் சிறப்பம்சங்கள் :
சாதாரண செருப்புக்கும் இதற்கும் தரத்தில் எந்தவித்தியாசமும் இல்லை
உடலுக்கு குளிர்ச்சியை தரும்
இயற்கை குணம் படைத்ததால் பொதுவாகவே நம் உடம்புக்கு மிகவும் நல்லது.
இதன் விலையும் குறைவுதான்......
கோவில் கும்பாபிஷேகங்களில் தீர்த்தம் தெளிக்க கூட இந்த வெட்டிவேரை பயன்படுத்தப்படுகிறது ....
சொல்லியாச்சி.........இனி உங்கள் கையில் .........வெட்டிவேர் செருப்பு உண்மையில் வரவேற்கத்தக்கதுதான் .......
