சிறுநீரக ஆரோக்கியத்துக்கு வாழைத்தண்டு கூட்டு.. சுவையா செய்ய ரெசிபி

Vazhaithandu Kootu Recipe : வாழைத்தண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் அதில் கூட்டு செய்வது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

vazhaithandu kootu recipe and its benefits in tamil mks

பொதுவாகவே ஒவ்வொரு வீட்டிலும் வாழைத்தண்டு வைத்து வெவ்வேறு ரெசிபி செய்வார்கள். அந்தவகையில், இன்று வாழைத்தண்டில் கூட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம். அதுவும் மிகவும் சுலபமாக. 

வாழைத்தண்டு கூட்டு செய்ய தேவையான பொருட்கள்:

வாழைத்தண்டு - 1 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
தேங்காய் துருவல் - 1/2 மூடி
பாசி பயறு - 1/2 கப்
பச்சை மிளகாய் - 2
சீரகம் - 1 ஸ்பூன்
மிளகுத்தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிதளவு
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

இதையும் படிங்க:  வாழைத்தண்டு பொரியல் இப்படி செஞ்சு பாருங்க.. பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவாங்க!

செய்முறை :

இதற்கு முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் பருப்பை சேர்த்து வறுக்கவும். பிறகு அது ஆறியதும் அதில் தண்ணீர் ஊற்றி கழுவி, பின் தண்ணீரில் சுமார் ஐந்து நிமிடம் ஊற வைக்கவும். ஐந்து நிமிடம் கழித்து அதை அடுப்பில் வைத்து வேகவைத்து தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது வாழைத்தண்டை தோல் சீவி அதிலிருந்து நார் எடுத்து பொடியாக நறுக்கி அதை மோர் கலந்த தண்ணீரில் போட்டு வைக்கவும். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் வேகம் பருப்பில் நறுக்கிய வாழைத்தண்டை சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு கிளறி மூடி வைத்து சுமார் பத்து நிமிடம் வேக வைக்கவும். வாழைத்தண்டு நன்றாக வெந்தவுடன் அதில் உப்பு சரிபார்த்து கீழே இறுக்கவும். அவ்வளவுதான் சுவையான வாழைத்தண்டு கூட்டு தயார்.

இதையும் படிங்க: வாழைத்தண்டு : மாசத்துக்கு 2  முறையாவது இதன் ஜூஸ் குடிங்க.. விஷயம் தெரிஞ்சா NO செல்லவே மாட்டீங்க!

வாழைத்தண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்:

சிறுநீரக கல்: 

உடலில் அதிக அளவு உப்பு மற்றும் பல காரணங்களால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகின்றது. இந்த பிரச்சனையை சரி செய்வதற்கு வாழைத்தண்டு அருமருந்தாகும். சிறுநீரக கல் பிரச்சினை உள்ளவர்கள் தினமும் காலை வாழைத்தண்டு ஜூஸ் குடித்து வந்தால் சிறுநீரகம் வழியாக கற்கள் கரைந்து வெளியேறிவிடும். முக்கியமாக வாழைத்தண்டு ஜூஸில் சிறிதளவு ஏலக்காய் சேர்த்து குடித்தால் சிறுநீரக கல் வெளியேறும்போது வலி உண்டாகும். அதுமட்டுமின்றி வாழைத்தண்டு ஜூஸில் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து குடித்தால் சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்கப்படும்.

உடல் எடையை குறைக்கும்:

உடல் எடையை குறைப்பதற்கு நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் வாழைத்தண்டில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும். இதற்கு வாழைத்தண்டில் ஜூஸ் குடித்து வந்தால் பசி கட்டுப்படுத்தப்படும் நீண்ட நேரம் வயிறு நிரம்பி இருக்கும். மேகும் அதிகம் சாப்பிடுவதும் தவிர்க்கப்படும். இதன் காரணமாக உடல் எடையை சுலபமாக குறைத்து விடலாம் 
வேண்டுமானால் நீங்கள் வாழைத்தண்டில் பொறியல் அல்லது கூட்டு செய்து கூட செய்து சாப்பிடலாம்.

ரத்த சோகைக்கு நல்லது:

உடலில் இரும்பு சத்து குறைவாக இருக்கும் போது தான் ஹீமோகுளோபின் அளவு குறைந்து இரத்த சோகை ஏற்படும். பொதுவாக பெண்களுக்கு தான் இந்த பிரச்சனை அதிகம் உண்டாகும். அந்த வகையில் வாழைத்தண்டில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இது தவிர வைட்டமின் பி6 உள்ளது. இவை இரண்டும் உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதற்கு உதவும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது:

தற்போது சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. இதை தடுக்க வாழைத்தண்டு முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் வைக்க தினமும் ஒரு கிளாஸ் தண்டு ஜூஸ் குடிப்பது நல்லது. 

ஜீரண சக்தி அதிகரிக்கும்:

ஒரு சிலருக்கு எந்த உணவு சாப்பிட்டாலும் ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும் இந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு வாழைத்தண்டு ரொம்பவே நல்லது. மேலும் இவர்கள் வாழைத்தண்டில் பொறியியல் கூட்டு அல்லது ஜூஸ் செய்து கூட சாப்பிடலாம் ஏனெனில் வாழைத்தண்டில் இருக்கும் அன்புகள் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி ஜீரண சக்தியை மேம்படுத்தும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios