Vastu Tips: எந்த திசையில் கடிகாரத்தை மாட்டினாள் லட்சுமி தேவி வருகை தருவாள்...வாஸ்து சாஸ்திரம் சொல்வது என்ன...?

கடிகாரம் எந்த திசையில்  வைத்தால் நல்ல பலனை தரும் என்பதை பார்க்கலாம்.

Vastu Tips: positive affirmations for alarm clock

மனித வாழ்வில் கடிகாரம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஏனெனில், கடிகாரம் காட்டும் நேரத்தின் ஒவ்வொரு நொடியையும் இழந்தால் நம்மால் திரும்ப கொண்டு வர முடியாது. குறித்த நேரத்தில் வேலை செய்து முடிப்பது மிகவும் முக்கியம் என்பது வாழ்க்கையில் வெற்றி பெற நினைப்பவர்களின் பொதுவான கருத்து எனலாம். நமது எல்லோரின் வீட்டிலும் அவசியம் இருக்கும் பொருள் கடிகாரம். குக்கூ கடிகாரம், டிஜிட்டல் கடிகாரம், கை கடிகாரம், தாத்தா கடிக்காரம், அலமாரி கடிகாரம், ரயில் கடிகாரம் என்று பலவகை கடிகாரம் உள்ளன. இத்தகைய சிறப்பு முக்கியத்துவம்  வாய்ந்த கடிகாரத்தை மறந்து, இன்றைய நவீன உலகில் நம் அனைவரும் போனில் டைம் பார்க்கிறோம். ஆனால், வீட்டில் கடிகாரம் மாட்டுவது, வீட்டிற்கு அழகை கொடுப்பதோடு, வாஸ்து சாஸ்திரத்தில் பல முக்கியத்துவம் உண்டு.

Vastu Tips: positive affirmations for alarm clock

கடிகாரம் என்பது நேரத்தைக் காட்டுவது மட்டுமல்ல, கடிகாரம் ஒரு நபரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் முக்கிய பொருளாக பார்க்கப்படுகிறது.  இந்நிலையில், கடிகாரத்தை வைப்பதற்கு முன், அது சரியான திசையில் வைக்கப்பட்டுள்ளதா, அதற்கான வாஸ்து விதிகள் என்ன என்பதை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.  கடிகாரம் எந்த திசையில்  வைத்தால் நல்ல பலனை தரும் என்பதை பார்க்கலாம்.

வாஸ்து சாஸ்திரத்தின்படி, வடகிழக்கு திசையின் சுவரில் கடிகாரம் வைப்பது மங்களகரமானது. இதற்குக் காரணம், கிழக்கு மற்றும் வடக்கு திசையில் நேர்மறை ஆற்றல் நிலவுவதாக நம்பிக்கை உள்ளது. இந்த திசைகளில் கடிகாரத்தை வைப்பது சிறந்த பலன்களைத் தரும். மேலும், உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். 

கிழக்கு திசையில் கடிகாரத்தை வைப்பதன் மூலம் வீட்டிற்கு அன்னை லட்சுமி தேவி வருகை தருவாள் என நம்பப்படுகிறது. இது தவிர வீட்டில் வசிக்கும் உறுப்பினர்களின் மனதில் நேர்மறை எண்ணங்கள் தோன்றும். 

அதே நேரத்தில், வீட்டின் அல்லது அலுவலகத்தின் தெற்கு சுவரில் கடிகாரத்தை  பொருத்த க்கூடாது, ஏனெனில் இந்த திசையில் கடிகாரத்தை வைப்பதன் மூலம், எதிர்மறை ஆற்றலின் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கவதாக கூறப்படுகிறது. எனவே, கடிகாரத்தை ஒருபோதும் தெற்கு திசையின் சுவரில் வைக்கக் வேண்டாம்.

வீட்டில் அல்லது அலுவலகத்தில் சிவப்பு, கருப்பு அல்லது நீல நிற கடிகாரத்தைப் பயன்படுத்தக்கூடாது. அதே நேரத்தில் மஞ்சள், பச்சை அல்லது வெளிர் பழுப்பு நிற கடிகாரத்தை வைப்பது நல்லது.

அதே போன்று வீட்டின் எந்த கதவுக்கும் மேலே உள்ள சுவற்றில் கடிகாரம் பொருத்தப்பட்டிருந்தால், அதை உடனடியாக அகற்றவும். இதுவும் எதிர் மறை ஆற்றலுக்கு வலு சேர்க்கும். இது தவிர, வீட்டில் ஏதேனும் கடிகாரம் ஓடாத நிலையில் கிடந்தாலோ அல்லது பழுதடைந்திருந்தாலோ, அல்லது உடைந்து இருந்தாலோ, அதையும் அகற்றவும். உண்மையில்,உடைந்த அல்லது ஓடாத கடிகாரத்தின் கைகள் எதிர்மறை ஆற்றலைக் குறிக்கின்றன.

Vastu Tips: positive affirmations for alarm clock

மேலும், ஓடாத கடிகாரங்களை வீட்டில் வைத்திருப்பதால், பணப் பிரச்சனை ஏற்படும் என  வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அதாவது கடிகாரம் ஓடாமல் நிற்பதை போல், மனித வாழ்க்கை ஸ்தம்பித்து போகலாம் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. எனவே, மேற்கூறிய வழிமுறைகளின் படி கடிகாரத்தை வீட்டில் மாட்டுவது சிறந்தது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios