Valimai kerala fans: அஜித் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக உருவாகி உள்ள வலிமை திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இதையடுத்து, தமிழ்நாட்டை போன்று கேரளாவின் பல்வேறு இடங்களில் ரசிகர்கள் மாஸ் செய்து வருகின்றனர். 

அஜித் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக உருவாகி உள்ள வலிமை திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இதையடுத்து, தமிழ்நாட்டை போன்று கேரளாவின் பல்வேறு இடங்களில் ரசிகர்கள் மாஸ் செய்து வருகின்றனர். 

அஜித் குமார் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் (Boney Kapoor) தயாரித்துள்ளார். குடும்ப செண்டிமெண்ட் நிறைந்த அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமாக வலிமை தயாராகி உள்ளது.இந்தப் படத்தில் ஹிமா குரேஷி, கார்த்திகேயா கும்மகொண்டா, சுமித்ரா, யோகி பாபு, அச்யுத்குமார், பாவல் நவகீதன் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா பாடல்களை உருவாக்கியிருக்கிறார். 

 இப்படம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று ரிலீசாகி உள்ளது. வலிமை படத்தை பார்க்க அதிகாலையிலேயே அஜித் ரசிகர்கள் திரையரங்குகள் நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். இன்று காலை 4 மணிக்கு வலிமை படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டது. இதற்காக அதிகாலையிலேயே திரையரங்கிற்கு அஜித் ரசிகர்கள் படையெடுத்தனர். சில திரைஅரங்குகளில் ரசிகர்கள் உற்சாகத்தில் அஜித்தின் கட்-அவுட் மற்றும் பேனருக்கு பால் அபிஷேகம் செய்தனர். 

இந்நிலையில், 90ஸ் கிட்ஸ் முதல் 2கே கிட்ஸ் வரை தமிழ் சினிமாவில் எப்போதும் இரண்டு நடிகர்களுக்குள் போட்டி இருக்கும். அந்த போட்டி தான் படத்திற்கு படம் இவர்களின் வசூலை பல மடங்கு அதிகரிக்கின்றது.

அந்த வகையில் தற்போது அஜித்-விஜய் ரசிகர்கள் சண்டை தான் உச்சம். இந்நிலையில் அஜித் நடிப்பில் வலிமை படம் திரைக்கு இன்று வந்துள்ளது. இப்படத்தின் மீதி ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது. மேலும், வலிமை படம் கேரளாவில் 250 திரையரங்கில் வெளியிடப்பட்டுள்ளது. விஜய்யின் கோட்டையாக இருக்கும் கேரளாவில், அஜித்தின் ரசிகர்கள் மாஸ் காட்டி வருகின்றனர். 

Scroll to load tweet…


அந்த வகையில், தற்போது கேரளாவின் எர்ணாகுளம் பகுதியில் அஜித்தின் ரசிகர்கள், விஜய்யின் ரசிகர்களை கடுப்பேத்தும் விதமாக உயரமான கட்டவுட்டுக்கு மாலை அணிவிக்கின்றனர். தற்போது, அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.