Asianet News TamilAsianet News Tamil

Valimai collection: விஜய்யின் பிகில் பட வசூலை பின்னுக்கு தள்ளிய வலிமை! தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூலா

Valimai collection: தமிழ் சினிமாவில்...இரண்டு மாபெரும் நடிகர்கள் இடையே வசூலில் எப்போதும் போட்டி நிலவும், அந்த வகையில், தற்போது தமிழகத்தில்  பிகில் படத்தின் வசூலை  வலிமை முறியடித்துள்ளது.

Valimai box office collection Day 7
Author
Chennai, First Published Mar 3, 2022, 10:19 AM IST | Last Updated Mar 3, 2022, 11:19 AM IST

தமிழ் சினிமாவில்..இரண்டு மாபெரும் நடிகர்கள் இடையே வசூலில் எப்போதும் போட்டி நிலவும், அந்த வகையில், தற்போது தமிழகத்தில்  பிகில் படத்தின் வசூலை  வலிமை முறியடித்துள்ளது.

 ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற வலிமை திரைப்படம் உலகம் எங்கிலும், பாக்ஸ் ஆபிஸிலும் பட்டையை கிளப்பி வருகிறது. 

Valimai box office collection Day 7

போனிகபூர் தயாரிப்பில் அஜித் (Ajith) நடித்துள்ள படம் வலிமை. எச்.வினோத் இயக்கி உள்ள இப்படத்தில் நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். 

இப்படத்தில் வில்லன் கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா (Karthikeya) நடித்துள்ளார். யுவன் மற்றும் ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.  மேலும் குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

Valimai box office collection Day 7

2 ஆண்டு காத்திருப்புக்கு பின் இப்படம் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் மிகவும் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர். கடந்த 2019-ம் ஆண்டே தொடங்கப்பட்ட இப்படம் இரண்டு ஆண்டுகள் கடின உழைப்புக்கு பின்  பிப்ரவரி 24 அன்று உலகமெங்கும் பிரமாண்டமாக வெளியானது.

இது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் வெளியாகி உள்ளது. அஜித் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். ரசிகர்களின் பேராதரவை தொடர்ந்து வலிமை திரைப்படம் தமிழ்நாடு வசூலில் புதிய சாதனை படைத்திருந்தது. வலிமை, முதல் நாளிலேயே ரூ. 36 கோடி வசூல் செய்து மாஸ்டர், அண்ணாத்த போன்ற படங்களின் சாதனைகளை இப்படம் முறியடித்திருந்தது. 

Valimai box office collection Day 7

தியேட்டர் முன் குவிந்த அஜித் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், அஜித்தின் பேனருக்கு பாலாபிஷேகம் செய்தும் கொண்டாடினர்.  ஏற்கனவே, விஜய் நடிப்பில் வெளிவந்த சர்கார் படத்தின் சாதனையையும், வலிமை படம் முறியடித்துள்ளது.  மேலும், இப்படத்தின் வசூல் விவரங்கள் குறித்த விவரமும் தொடர்ந்து வெளியாகி வருகிறது. 

Valimai box office collection Day 7

அந்த வகையில், தற்போது முதல் வார முடிவில் அஜித்தின் வலிமை படம் தமிழகத்தில் ரூ. 105 கோடி வசூலித்துள்ளது. நேற்று மட்டும் படம் ரூ. 4 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. ஆனால், விஜய்யின் பிகில் படம் முதல் வாரத்தில் ரூ. 102 கோடி மட்டுமே வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Valimai box office collection Day 7

வரும் நாட்களில் இதன் எண்ணிக்கை பெரிய நடிகர்களின் படம் வராததால், அதிகரிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

மேலும் படிக்க....Sakshi Agarwal Hot: இடுப்பு தெரிய மெல்லிய சேலையில் சாக்ஷி அகர்வால் போட்ட குத்தாட்டம்...வைரல் வீடியோ..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios