வீட்டில் பணம் நிறைந்து இருக்க....வலம்புரிச் சங்கு செய்யும்  அதிசயம்...!

வீட்டில் எப்போது லக்ஷ்மி கலாட்சம் நிறைந்து செய்யும் தொழில் மேன்மை அடைந்து செல்வம்  கொழிக்க வலம்புரி சங்கு மிகவும் சிறந்த ஒன்று.பாற்கடலில் மஹாலக்ஷ்மியுடன் தோன்றிய பெருமை வலம்புரிச் சங்குக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. 

வலம்புரி சங்கு 

எத்தனையோ லட்சங்கள் மற்ற சங்குகள் கிடைத்தாலும், அரிதினும் அரிதான வலம்புரி சங்கு கிடைப்பது  மிகவும் அரிதான ஒன்று.

வலம்புரி சங்கு எங்கெல்லாம் இருகின்றதோ, அங்கு கண்டிப்பாக திருமகள் குடி கொண்டிருப்பாள் என்பது ஐதீகம்.மேலும் நாம் செய்யும் எந்த வேலையும் தடை இல்லாமல்  நடக்கும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இருக்காது.அதேபோல் தான் வலம்புரி சங்கு வீட்டில் இருந்தால் தோஷங்கள், துஷ்ட சக்திகள் எதுவும் அண்டாது.

கண்திருஷ்டி படாது, எதிரிகள் ஒதுங்கி போவார்கள்.கடன் பிரச்சினை நீங்கும்.மேலும்,எதிர் மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.

வீட்டில் உள்ள கெட்ட சக்திகள் மறைந்து நல்ல சக்திகள் உள்ளே வரும் என்பது காலம் காலமாக உள்ள ஐதீகம்.