கரோனோ வைரசுக்கு தயராகிறது "தடுப்பூசி"...! ஆனால் "6 மாத காலம்" தேவை..!   

உலகம் முழுவதும் பெரும் பதற்றத்தை கிளப்பியுள்ள கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து நாளுக்கு நாள் தினந்தோறும் புதுப்புது தகவல் வெளி வந்த வண்ணம் இருக்கின்றது.

சீனாவில் ஹுவாங் நகரில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட முதல் நபர் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து நகரம் முழுவதுமே முடங்கிப்போயுள்ளது. அதன்பின் தற்போது 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளத்தக்க தெரிவிக்கப்பட்டு உள்ளது.  

நோய் கிருமி பரவாமல் இருக்க... இந்த நகரத்தில் இருந்து வேறு நகரத்தில் செல்வதற்கும் வேறு நகரத்திலிருந்து இந்த நகரத்திற்கு நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா கனடா உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் சீனாவில் இருந்து சென்ற பயணிகள் மூலம் ஒரு சிலருக்கு கரோனா வைரஸ் தாக்கி உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவும் பல திட்டங்களை வகுத்து வருகிறது. இந்த நிலையில் இதனை தடுக்கும் பொருட்டு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் இறங்கியுள்ளது அமெரிக்கா  தேசிய சுகாதார ஆணையம். மேலும் இதுகுறித்து தெரிவிக்கும்போது கரோனா வைரசுக்கு தடுப்பு ஊசி கண்டுபிடிக்க குறைந்தது ஆறு மாத காலம் ஆகும் என்றும் முதற்கட்ட சோதனை வெற்றி பெற்றபிறகு தீவிரமாக அடுத்தகட்ட நடைமுறைப்படுத்துவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது. 

இதற்கிடையில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனமும் கரோனா வைரசுக்கு தடுப்பூசி தயார் செய்யும் பணியில் இறங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.