நாம் என்னதான் அழகழகான ஆடை அணிந்தாலும் மேலும் அழகு சேர்க்க இயற்கையாக நமக்குள்ள தலைமுடி தான் ஆனால் ஒரு சிலருக்கு இளம் வயதிலேயே முடி நரைப்பது தலை முடி உதிர்வதும் வாடிக்கையாக உள்ளது தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்த பல்வேறு சிகிச்சை எடுத்துக்கொண்டாலும் வேறுவேறு ஷாம்பு பயன்படுத்தினால் தலைமுடி கொட்டுவது ஒருசிலருக்கு நிறுத்தவே முடியாது.

இதன் காரணமாக ஏற்படும் வழுக்கை குறிப்பாக ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கை பற்றி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. எனவே அந்த வகையில் மீண்டும் முடி வளர என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம்.

முட்டையின் வெள்ளை கருவுடன், அரைத்து பிழிந்து வைத்துள்ள ஆப்பிள் சாற்றை கலந்து எடுத்துக் கொள்ளவும். இந்த கலவையை தலையில் நன்கு தடவி சுமார் 30 நிமிடம் அப்படியே விடவும் இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக முடி வளர்வதை கண் கூடாக பார்க்க முடியும்.