மயில் இறகை "இந்த இடத்தில்" வைத்தால் நடக்கும் அதிசயம் என்ன தெரியுமா..? 

மயிலிறகை புனிதமாக கருதி பலரும் பல்வேறு விதங்களில் பயன்படுத்தி வருவது தெரிந்த ஒன்றே...

குறிப்பாக மயிலிறகை பயன்படுத்தி சிலர் மெடிசின் செய்தும், ஒரு சில நோய்களுக்கு குணப்படுத்த பயன்படுத்துகின்றனர் விவரம் அறிந்தவர்கள். அதேபோன்று மயிலிறகின் மீது கொண்ட ஒரு விதமான ஆசை காரணமாக சிறு குழந்தைகளும் தான் படிக்கும் புத்தகத்தில் வைத்து விளையாடுவதை பார்க்க முடியும்.

இதை எல்லாம் தாண்டி மிக அற்புதமான விஷயங்களை கொண்டு உள்ளது மயிலிறகு. குறிப்பாக தோஷங்களை நீக்குவதற்கும் சனிபகவானின் ஆசி  கிடைப்பதற்காகவும்  பயன்படுத்தப்படுகிறது. மயிலிறகை கருப்புநிற நூலில் கட்டி அதை நீரில் தொட்டு "ஓம் சனீஸ்வராய நமஹ" என்று தினமும் சொல்லி வர சனி தோஷம் நீங்குமாம்.

அதேபோன்று வீட்டில் செல்வம் அது அதிகரிக்க பணம் வைக்கும் இடத்தில் மயிலிறகை வைத்து வந்தால் நன்றாக பணம் வந்து சேருமாம். அதேபோன்று வீட்டு வாசலில் கட்டி வைத்தாலும் எதிர்மறை எண்ணங்கள் நீங்கி நேர்மறை எண்ணங்களை அதிகரிக்க செய்யும் .இது போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது மயிலிறகு.