கிராம் மக்களை ஏமாற்றி 4 கோடி ரூபாயை ஆட்டையப்போட்ட ஊழல்வாதிகள்..! ஆர்.டி.ஐ இல்  அதிர்ச்சி தகவல்..! 

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள செய்யூர் ஊராட்சியில் 3500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊரில் இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லாததால் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் எனவும் பலமுறை கோரிக்கை வைத்து இருந்தனர்.

இந்த நிலையில் 350க்கும் மேற்பட்ட கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக கணக்கு காண்பித்து அதற்காக 4 கோடி ரூபாய் வரை பணத்தை கொள்ளையடித்து உள்ள சம்பவம் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து அதே பகுதியில் வசிக்கும் செந்தில் முருகன் என்ற நபர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்த கிராமத்திற்கு இதுவரை என்னென்ன அரசு சார்ந்த நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு உள்ளது என்ற  கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. 

அதன்படி இந்த பகுதியில் மட்டும் 400க்கும் மேற்பட்ட கழிப்பறைகள் கட்டப்பட்டு இருந்ததாகவும் அதேபோன்று குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றப்பட்டு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டு 4 கோடி ரூபாய் வரை ஊழல் செய்து உள்ளனர்.

ஆனால் இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் அடைந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக வடக்கு செய்யூர் என்ற பகுதியில் மட்டும் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே மாவட்ட ஆட்சியர் இந்த விஷயத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்து செயல்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.