Asianet News TamilAsianet News Tamil

90 ஆண்டுகளாக மாறாத பண்பாடு நிர்வாணமாக வாழும் கிராம மக்கள்..!!

பண்டைய நாகரீகங்களின் பிறப்பிடமாகவும், நவீன நாகரீகர்த்தின் தலைமையிடமாகவும் அறியப்படக்கூடிய இடங்களில் ஒன்றான ஐக்கிய ஒன்றியத்தில் நிர்வாண கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஏன் அவர்கள் உடை அணியாமல் நிர்வாணமாக இருந்து வருகிறீர்கள் என்று ஆய்வு செய்தபோது, அது அவர்களுடைய பண்பாட்டு அடையாளம் என்று தெரியவந்துள்ளது. இதுகுறித்து மேலும் விரிவாக தெரிந்துகொள்வோம்.

unique village of the world where people live without clothes know the reasons behind it
Author
First Published Sep 15, 2022, 9:02 PM IST

உலகில் பல்வேறு இடங்களில் நாகரீகங்கள் தலைதோங்கி வளர ஆரம்பித்துவிட்டாலும், அது கால் படாத இடங்களும் இன்னும் இருக்கத்தான் செய்கின்றன. பல்வேறு நாடுகளில் வசிக்கும் மக்களிடையே புதுமையான பண்பாட்டு அடையாளங்கள் தொடர்ந்து கண்டுப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உடை என்கிற அடிப்படைத் தேவையின்றி ஒரு கிராம மக்கள் 90 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் தகவல் மானுடவியலாளர்களை வியப்படையச் செய்துள்ளது. பண்டைய நாகரீகங்களின் பிறப்பிடமாகவும், நவீன நாகரீகர்த்தின் தலைமையிடமாகவும் அறியப்படக்கூடிய இடங்களில் ஒன்றான ஐக்கிய ஒன்றியத்தில் நிர்வாண கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஏன் அவர்கள் உடை அணியாமல் நிர்வாணமாக இருந்து வருகிறீர்கள் என்று ஆய்வு செய்தபோது, அது அவர்களுடைய பண்பாட்டு அடையாளம் என்று தெரியவந்துள்ளது. இதுகுறித்து மேலும் விரிவாக தெரிந்துகொள்வோம்.

ரகசிய கிராமம்

பலருக்கும் தெரியாமல் இருந்த இக்கிராமப் பகுதி, தற்போது வெளியாகியுள்ள இந்த தகவல் மூலம் உலகளவில் அடையாளம் காணப்பட்டுள்ளது. இங்கு வசிக்கும் மக்கள் ஏழ்மையில் இல்லை, பசி மற்றும் பட்டியினை அனுபவிக்கக்கூடியவராக இல்லை. ஆனால் தங்களுடைய பண்பாட்டு அடையாளம் என்று கூறி, சுமார் 90 ஆண்டுகளாக அவர்கள் நிர்வாணமாக வாழ்ந்து வருகின்றனர்.

ஸ்பீல்ப்ளாட்ஸ்

ஐக்கிய ஒன்றியத்தின் ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் என்கிற பகுதிக்கு அருகிலுள்ள இந்த கிராமத்துக்கு ஸ்பீல்ப்ளாட்ஸ் என்று பெயர். இங்கு ஆடம்பரமான வீடுகள், பெரியலவிலான நீச்சல் குளங்கள், மக்கள் குடிப்பதற்கான பீர் போன்ற அனைத்து நவீன வசதிகள் உள்ளன. ஆங்காங்கே நவீனங்கள் தெரிந்தாலும், 90 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்பீல்ப்ளாட்ஸ் கிராமம் இப்படித்தான் இருந்து வருகிறது.

ஸ்பீல்ப்ளாட்ஸ் மக்களின் கோட்பாடு

ஸ்பீல்ப்ளாட்ஸ் கிராமத்தில் வசிக்கும் ஐசால்ட் ரிச்சர்ட் இப்படியொரு வாழ்க்கையை வாழ்வதில் பெரும் அழகியல் இருப்பதாக கூறுகிறார். மேலும் அவரது தந்தை 1929 ல் இச்சமூகத்தை நிறுவியதாகவும், இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையில் எந்தவேறுபாடும் இல்லை என்பதை வலியுறுத்துவதே ஸ்பீல்ப்ளாட்ஸ் சமூகத்தின் கோட்பாடு என்று கூறுகிறார்.

உலக பிரபலம் கொண்ட ஸ்பீல்ப்ளாட்ஸ் 

இந்த கிராமம் குறித்தும், அங்கு வசிக்கும் மக்களின் பண்பாட்டை குறித்தும் பல ஆவணப்படங்கள் மற்றும் குறும்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த கிராமத்துக்கு புதியதாக பிழைப்புத் தேடி வந்தவர்கள், தபால்கார்கள், பல்பொருள் அங்காடி விற்பனையாளர்கள், பொருட்களை டெலிவிரி செய்யும் நபர்களின் பார்வையில் ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த கிராமத்துக்கு ஸ்பீல்ப்ளாட்ஸ் என்கிற பெயர் மட்டுமில்லாமல் ‘விளையாட்டு மைதானம்’ என்கிற மற்றொரு பெயரும் உண்டு.

Follow Us:
Download App:
  • android
  • ios