வாஸ்துப்படி வீட்டில் தொலைக்காட்சியை இங்கு தான் வைக்க வேண்டும்..!!

தொலைக்காட்சிக்கும் உங்களுக்குமான இடைவெளி குறைந்தது 10 அடி இருக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இதே கருத்தை தான் அறிவியல் நிபுணர்களும் முன்வைப்பது குறிப்பிடத்தக்கது. 
 

understand Vastu placement for the TV in a home

வீடு கட்டுவதற்கும், வீட்டின் முக்கிய அறைகள் எங்கு இருக்க வேண்டும் என்பதற்கு மட்டுமில்லாமல், வீட்டிலுள்ள பொருட்கள் எந்தந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பதற்கு வாஸ்து சாஸ்திரத்தில் பலன் கூறப்பட்டுள்ளடுது. அந்த வகையில் இந்திய வீடுகளில் டிவி-க்களுக்கு பெரிய முக்கியத்துவம் உண்டு. வாஸ்து சாஸ்திரத்திலும் டிவி வைப்பதற்கு என்று சில பலன்கள் கூறப்பட்டுள்ளன. வீடுகளில் டி.வி எந்த திசையில் வைக்க வேண்டும்? எப்படி வைக்க வேண்டும்? உள்ளிட்ட தகவல்கள் அந்த சாஸ்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதுகுறித்த தகவல்களை விரிவாக பார்க்கலாம். 

திசை

வீடுகளில் தொலைக்காட்சியினை வடக்கு, மேற்கு, வட மேற்கு திசையில் வைக்கலாம். ஆனால் அதை தென்மேற்கு திசையில் மட்டும் வைக்கக்கூடாது. ஒருவேளை உங்களுக்கு தெரியாமல் வைத்தால், அது வீட்டின் இயக்கத்தை தடைசெய்யும். இதனால் நல்ல காரியங்கள் கைக்கூடி வராது. ஒருசில சமயங்களில் வீட்டின் உரிமையாளரின் உடல் இயக்கங்கள் கூட பிரச்னைக்கு வரும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

உயரம்

பொதுவாக டெக்னீஷியன்கள் தொலைக்காட்சியின் அளவை பொறுத்து உயரத்தை தேர்வு செய்து மாட்டுவார்கள். அதேபோன்று தான் டி.வி அளவை பொறுத்து உயரம் முடிவு செய்யப்பட வேண்டும் என வாஸ்து கூறுகிறது. அதன்படி சுமார் 60 முதல் 70 அங்குல தொலைக்காட்சியை தரையில் இருந்து சுவர் இருக்கும் உயரத்தில் வைக்கலாம். 

வாசல்

ஒருவேளை உங்களுடைய வீட்டில் வடமேற்கு திசை இருந்தாலும், அதற்கு நேராக கதவு இருந்தால் டி.வி-யை வைக்கக்கூடாது. எப்போதும் தொலைக்காட்சிக்கு முன் கதவு எதுவும் இல்லாமல் இருக்க வேண்டும். அதேபோன்று ஜன்னல்களும் இருக்கக்கூடாது. நீங்கள் அதை கவனிக்காமல் டி.வி-யை மாட்டிவிட்டால், வெளிப்புற வெளிச்சம் டிவி-க்குள் ஊடுருவும். இதனால் காட்சிகள் எதுவும் தெரியாது. 

படுக்கை

வீடுகளில் எப்போதும் டிவி எப்போதும் ஹாலில் தான் இருக்க வேண்டும். படுக்கை அறை, சமையலறை, டைனிங் பகுதி போன்றவற்றில் வைக்கக்கூடாது. அதையும் மீறி நீங்கள் உங்களுடைய படுக்கை வரை டி.வி-யை கொண்டு வந்து மாட்டி வைத்தால், தம்பதிகளுக்கு இடையேயான நெருக்கம் பாதிக்கப்படும். தூக்கம் கெட்டு உடல்நலம் பாதிக்கப்படும். இதன்காரணமாகவே ஹாலை தவிர்த்து வேறு எந்த அறைகளிலும் தொலைக்காட்சியை வைக்கக்கூடாது.

உங்களுடைய காதலன் உங்களை நிஜமாகவே காதலிக்கிறாரா..?

ஒரு டிவி மட்டுமே

அனைவரும் பயன்படுத்தும் ஹாலில் மட்டுமே டி.வி. இருக்க வேண்டும். அதை தவிர்த்து ஒன்றுக்கும் மேற்பட்ட தொலைக்காட்சிகளை வைப்பது மன கஷ்டம், பணக் கஷ்டத்துக்கு வழிவகுக்கும் என்று வாஸ்து கூறுகிறது. அதேபோன்று பூஜைக்கு அறைக்கு அருகிலும் தொலைக்காட்சியை வைக்கக்கூடாது. மேலும் குழந்தைகள் அறை, கழிவறைக்கு அருகாமையிலும் தொலைக்காட்சிகளை வைக்கக்கூடாது என்று வாஸ்து சாஸ்திரம் தெரிவிக்கிறது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios