பணமதிப்பிழப்பா..?! மூதாட்டியிடம் பழைய ரூபாய் நோட்டுக்கள்...! கையில் 46 ஆயிரம் வைத்துக்கொண்டு சிகிச்சை பெற முடியாமல் தவிக்கும் வேதனை...! 

திருப்பூரில் 2 மூதாட்டிகள் பழைய ரூபாய் 500 மற்றும் 1000 தாள்களை வைத்துக்கொண்டு எப்படி மாற்றுவது என திண்டாடி கொண்டு உள்ளனர்.

அதாவது பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து ஏதும் அறியாமல் இது நாள் வரை தாங்கள் சேர்த்து வைத்திருந்த பணமான 46 ஆயிரம் ரூபாயை மாற்ற முடியாமல் தவித்து வருகின்றனர்.பல்லடம் அடுத்த பூமலூர் பகுதியை சேர்ந்த ரங்கம்மாள் மற்றும் தங்கம்மாள் இவர்கள்  இருவருக்குமே  78 வயது ஆகிறது

தற்போது உடல்நிலை சரி இல்லாததால் சிகிச்சை எடுக்க பணம் தேவைப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தாங்கள் சேர்த்து வைத்திருந்த 46 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொடுத்து உள்ளனர். இவை அனைத்தும் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் என்பதால் அவர்களுடைய மகன்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது அவருடைய மகன்கள் தெரிவித்தும் கூட அவர்கள் நம்பாமல், எதிர்கால தேவையை கருதி ரூபாய் நோட்டை சேமித்து வைத்து உள்ளனர்.

இந்த நிலையில் தங்களுக்கு உடல் நிலை சரி இல்லாத காரணத்தினால், சிகிச்சை பெற தங்களிடம் இருந்த பணத்தை எல்லாம் எடுத்து வெளியில் வைத்து உள்ளனர். ஒன்றுமே தெரியாமல் இவர்கள் அனைவரும் இத்தனை நாள், இத்தனை ஆண்டுகள் மிகவும் கடினப்பட்டு யாருக்கும் தெரியாமல் சேர்த்து வைத்த பணத்திற்கு ஒரு மதிப்பும் இல்லையே என நினைக்கும் போது மிகுந்த வேதனையை அளிக்கிறது. அவர்களுடைய மனநிலை எப்படி இருக்கும்? என பல்வேறு கேள்விகள் எழுகிறது.

இதற்கு என்னதான் மாற்று வழி? அவர்களுக்கு அதே ரூபாய் மதிப்பில் புதிய ரூபாய் நோட்டுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளதா அல்லது இதற்கு என்னதான் தீர்வு கிடைக்கும்? என பல எதிர்பார்ப்புகள் கிளம்பி உள்ளது.