Asianet News TamilAsianet News Tamil

இன்று உலக சுகாதாரதினம் ..."மன அழுத்தம் " ... தீர்வு என்ன ?

world health day
ulaga sugathaara-thinam
Author
First Published Apr 7, 2017, 12:49 PM IST


ஆண்டுதோறும், எர்பல் 7 ஆம் தேதி உலக சுகாதார  தினமாக கொண்டாடப்படுகிறது. அதாவது 1948 ஆம் ஆண்டு முதல் இந்த  தினத்தை  கடை பிடிக்கப் படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் சுகாதாரத்தினத்தன்று, எதாவது  ஒரு டாபிக் பற்றி  பேசுவது உண்டு. இந்நிலையில், இந்த ஆண்டு  மன  அழுத்தம் என்ற  தலைப்பில்  பல கருத்துக்களை முன்வைக்கப்படுகிறது.உலக அளவில் 32 கோடி  பெற மன அழுத்தத்தால்  பாதிக்கப் பட்டுள்ளதாகவும் ,  அதில் இந்தியாவில் மட்டும் 5 கோடி பெற  மன அழுத்தத்தால்  பாதிப்பு அடைந்துள்ளதாகவும்  ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலக அளவில் அதிகமான எண்ணிகையில், ஆண்டுதோறும் மன அழுத்தத்தால் அதிக நபர்கள் பாதிக்கப்படுகின்றனர். வெளிநாடுகளில் உள்ள மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள்  கூட  சரியான  முறையில் இதற்காக  சிகிச்சை எடுத்துக்கொள்வது இல்லை

இதன் காரணமாக அதிக மன உளைச்சலுக்கு ஆளானவர்கள்  தற்கொலை  செய்துக்கொள்ளும்  அளவிற்கு  செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால்  இனி வரும்  காலங்களில்,  மன நிலை  பாதிக்கப்பட்டவர்களுக்காக அதிக நிதி ஒதுக்கி, அவர்களுக்கு  சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என  அனிவரின்  கருத்தாக  இருக்கிறது .

Follow Us:
Download App:
  • android
  • ios