குழந்தைப்பேறு இல்லாத தம்பதியினர்  உக்கிர மாகாளியம்மனை மடியேந்தி வழிபட்டால் விரைவில் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் அதீத நம்பிக்கையாக உள்ளது.

குழந்தைப்பேறு இல்லாத தம்பதியினர் உக்கிர மாகாளியம்மனை மடியேந்தி வழிபட்டால் விரைவில் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் அதீத நம்பிக்கையாக உள்ளது.

உக்கிர மாகாளியம்மன் மகிஷாசுரனை வதம் செய்த கோலத்தில் எட்டு கரங்களுடன் அம்மன் வடக்கு திசையை நோக்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த கோவில், திருச்சியில் உள்ள தென்னூரில் அமைந்துள்ளது.

இன்றைய காலத்தில், திருமணமாகி ஓரிரு ஆண்டுகளுக்கு குழந்தை பற்றிப் பெரும்பாலான தம்பதியினர் சிந்திப்பதே இல்லை. அதன் பிறகு குழந்தை பெற்றுக்கொள்ள முயலும்போது, சிக்கல் ஏற்படுகிறது. இதனால், பெரும்பாலான தம்பதியினர், மன உளைச்சலை எதிர்கொள்கின்றனர். சிலர், தவறான பழக்கவழக்கங்களை பின்பற்றுகின்றனர். இவை உங்கள் வாழ்வை குழைத்து போடும் ஒன்றாகும். 

மன அழுத்தம் இல்லாமல் இருந்தாலே, பெரும்பாலான பிரச்சனைகள் சரியாகும். அதற்கு ஆன்மிக ரீதியான சில வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றனர். தெய்வத்தின் சக்திக்கு ஈடாக இவ்வுலகில் எதுவும் ஈடாகாது. அறிவியல் பூர்வமாக, நடக்க இயலாத சில காரியங்களை நடத்தி கட்டுவது தெய்வத்தின் சக்தி என்பது மக்களின் நம்பிகை ஆகும். தெய்வத்தினை மனமுருகி வழிபட்டால் தீராத பிரச்சனை தீருமாம். அப்படி, குழந்தை இல்லாத தம்பதிக்கு உக்கிர மாகாளியம்மனை மனமுருகி வழிபட்டால், குழந்தை வரம் அள்ளி தருவதாக பக்தர்களின் அதீத நம்பிக்கையாக உள்ளது. 

உக்கிர மாகாளியம்மனை மனமுருகி வழிபட்டால் எதிரி தொல்லை, கடன் தொல்லை நீங்கும். மேலும், குழந்தைப்பேறு இல்லாத தம்பதியினர் அம்மனை மடியேந்தி வழிபட்டால் விரைவில் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் அதீத நம்பிக்கையாக உள்ளது. கண் மற்றும் வயிறு சம்பந்தமான நோய்கள் தீர்ந்தவுடன் அம்மனுக்கு புடவை சாத்தி பக்தர்கள் வழிபடுவார்கள்.

மேலும், தங்களுடைய வேண்டுதல் நிறைவேறியவுடன் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, பொங்கல் வைத்து வழிபடுவார்கள். ஒரு சில பக்தர்கள் அம்மனுக்கு ஆடு, கோழி ஆகியவற்றை பலியிட்டு வழிபாடு செய்வார்கள். அமாவாசை, பவுர்ணமி மற்றும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ஆடு, கோழி ஆகியவை பலியிடப்படாது.

தினமும் உக்கிர மாகாளியம்மன், படத்தை வைத்து, நெய் தீபம் ஏற்றிக் குறைந்தது 12 முறையாவது வலம் வந்து வணங்க வேண்டும். வணங்கிய பிறகு வெல்லத்தினால் செய்த பானகம் நைவேத்தியம் வேண்டும். 48 நாள்களாவது விரதம் இருந்து பூஜித்து வர வேண்டும். காலை, மாலை இரண்டு வேளையிலும் போட்டோவை வீட்டில் வைத்து சந்தனம், துளசியால் அலங்கரித்து பானகம் வைத்து வழிபடவும்.

ஆனால் ஒன்று, தெய்வத்தின் எந்த உருவையும், தோஷப் பரிகாரமாகப் பூஜித்து வரும் காலத்தில், அசைவ உணவைத் தவிர்த்து, நீராடி, நியமத்துடனும், தூய்மையான உள்ளத்துடனும் நம்பிக்கை, பக்தியுடனும் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

 உக்கிர மாகாளியம்மனை செவ்வாய்க்கிழமையிலும், பிரதோஷ நாளன்றும் வழிபடலாம். தினமும் சொல்லி தியானித்து வர ஏவல், பில்லி சூனியம், காரிய தடை, கடன் தொல்லை இவைகள் நீங்கி சுகம் பெறலாம்.

திருமண தடை உள்ளவர்கள் விரதம் இருந்து பிரதோஷ தினத்தன்று பானகம் வைத்து உக்கிர மாகாளியம்மன் வழிபட்டு வர வேண்டும். நிச்சயம் வரம் பெறலாம். உக்கிர மாகாளியம்மன் அருளால் விரைவில் தடை நீங்கி நல்லபடியாக திருமணம் நடைபெறும். மேலும், குழந்தை இல்லாத தம்பதியினர் குழந்தை வரம் பெறலாம்.