தாம்பரம் மதுரவாயல் இடையே உள்ள புறவழி சாலையில் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததால், அதில் பயணம் செய்த ஒருவர் தீயில் கருகி இறந்துள்ளார்.

இரு சக்கர வாகனத்தில், இரண்டு பேர் பயணம் செய்து உள்ளனர். அப்போது வாகனத்தில் தீப்பிடித்து உள்ளது. இதனை கண்ட பின்னால் அமர்ந்து இருந்த நபர் எகிறி கீழே குதிக்க, வாகனத்தை ஓட்டி சென்ற நபர் மட்டும் தீயில் கருகி உயிர் இழந்தார். வாகனமும் கருகியது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பின்னால் அமர்ந்து இருந்த நபர் அதிர்ச்சியில் அங்கேயே மயக்கம் அடைந்துள்ளார். இது குறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

ஆனால், தீயில் கருகி இறந்துபோன நபர் யார் என்று இதுவரை தெரியவில்லை. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.