2 மசாலா தோசை மற்றும் 2 காபியின் விலை ரூ.2 தான்… இணையத்தில் வைரலாகும் டெல்லி ஓட்டல் பில்!!
1971 ஆம் ஆண்டின் ஓட்டல் பில் ஒன்று இணையத்தில் வைரலாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
1971 ஆம் ஆண்டின் ஓட்டல் பில் ஒன்று இணையத்தில் வைரலாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சமீபகாலமாக 80, 90களில் விற்பனை செய்யப்பட்ட பைக்குகளின் பில்கள், ஓட்டல் பில்கள் போன்றவை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது 1971 ஆம் ஆண்டு ஓட்டல் பில் ஒன்று வைரலாகியுள்ளது.
இதையும் படிங்க: சின்ன சத்தம் கேட்டால் கூட தூக்கம் கலைகிறதா? இந்த நோய்கள் வரும் ஆபத்து உள்ளது
அந்த பில்லில் இருக்கும் விலையை கண்டு மக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். காரணம் ஓட்டலில் மசாலா தோசை, உருளைக்கிழங்கு மசியலுடன் சட்னி மற்றும் சாம்பாருடன் இருக்கும். இந்த தோசையின் விலை குறைந்தது 50 முதல் 150 ரூபாய் வரை இருக்கும். இந்த நிலையில் டிவிட்டரில் டெல்லி மோதி மஹால் உணவகத்தின் பில் பகிரப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'சரும நிறத்தை இழக்கிறேன்'புது நோயால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை உருக்கம் இந்த அறிகுறிகள் தான் காரணமா?
அதில் 2 மசாலா தோசை மற்றும் 2 காபியின் விலை 2 ரூபாய் மட்டுமே என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பில் டெல்லியின் மோதி மஹால் உணவகத்தின் 51 ஆண்டுகளுக்கு முந்தையது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பில் இணையத்தில் வைரலாகி மக்கள் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.