இந்த 3 பொருட்களை சாப்பிட்டு பாருங்க..! உங்கள யாரும் அசைக்க முடியாது..! 

நம் உடல் ஆரோக்கியத்திற்கு திராட்சை பாதாம் பேரிச்சம் பழம் இவை மூன்றும் எந்த அளவிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை பார்க்கலாம்.

மாறிவரும் கலாச்சாரத்திற்கு ஏற்ப நம்முடைய உணவு பழக்க வழக்கங்களும் மாறி விட்டது. இன்றைய காலகட்டத்தில் நல்ல சத்து நிறைந்த உணவுப்பொருட்களை நாம் எடுத்துக் கொள்கிறோமா என்றால் இல்லை. அப்படி இல்லை என்றாலும் ஏதாவது ஒரு வகையில்  பழங்களிலாவது சத்து நிறைந்த பழங்களை எடுத்து உடல் ஆரோக்கியத்தைப் பேணிக்காக்க வேண்டும் அல்லவா? அதில் மிக முக்கியமாக திராட்சை, பாதாம், பேரிச்சம் பழம் எந்த அளவிற்கு முக்கியமான ஒன்று என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

தூய ரத்தத்தை உற்பத்தி செய்யக்கூடிய சக்தி திராட்சைக்கு உண்டு.எலும்பு நரம்புகளுக்கும் அதிக வலிமை சேர்க்கும். இதேபோன்று இதய நோய் உள்ளவர்கள் வாரத்தில் 5 நாட்கள் பாதாம் எடுத்துக் கொண்டால் மாரடைப்பு வருவதை தவிர்க்க முடியும். ஆண்கள் தினமும் இதனை சாப்பிட்டு வர ஆண்மை அதிகரிக்கும். 

பேரிச்சம் பழத்தை தினமும் எடுத்துக்கொண்டால், ரத்த சோகை வராமல் தடுக்கலாம். ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்கிறது.பாலில் பேரிச்சம் பழத்தை சேர்த்து சாப்பிடும் போது உடல் ஆரோக்கியம் பெரும்.