ஆற்றுக்கால் பகவதி அம்மன் பக்தர்களுக்கு ஒரு 'குட் நியூஸ்'...கொடியேற்றத்துடன் இன்று துவங்கிய பொங்காலை விழா..!!

​​திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்காலை விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது. கடந்த ஆண்டை போல், இந்த ஆண்டும் வீடுகளிலேயே பொங்கலிட பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Trivandrum attukal bhagavathy temple pongala festival

திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்காலை விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது. கடந்த ஆண்டை போல் இல்லாமல், இந்த ஆண்டும் வீடுகளிலேயே பொங்கலிட பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் திருவனந்தபுரம் அருகே உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும்.  10 நாட்கள் நடைபெறும், இக்கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் லட்சக்கணக்கான பெண்கள் கலந்துகொள்ளும் பொங்காலை விழா  நடைபெறும். 

Trivandrum attukal bhagavathy temple pongala festival

இதில் கேரளம், தமிழகம் மட்டுமல்லாது நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் பொங்கலிட்டு வழிபடுவது வழக்கம். இக்கோவிலில் கடந்த 1997-ம் ஆண்டு நடந்த பொங்கல் விழாவில் 15 லட்சம் பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டனர். இது கின்னஸ் சாதனையாக கருதப்பட்டது.

இது போல 2009-ம் ஆண்டு நடந்த பொங்கல் விழாவில் 25 லட்சம் பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டனர். இதுவும் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. கடந்த ஆண்டு 40 லட்சம் பெண்கள் கலந்துகொண்டதால் இந்த ஆண்டு 45 லட்சம் பெண்கள் கலந்துகொண்டு பொங்கலிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இத்தகு சிறப்பு மிக்க ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா, இன்று தொடங்குகிறது. 

இதுபற்றி கோவில் நிர்வாகிகள் கூறியதாவது:-

கொரோனா பிரச்சினை காரணமாக கடந்த ஆண்டு பக்தர்களை வீடுகளிலேயே பொங்கலிடுமாறு அறிவுறுத்தியிருந்தோம். இந்த ஆண்டும் கொரோனா பரவல் முடிவுக்கு வரவில்லை. எனவே பக்தர்களை இந்த ஆண்டும் வீடுகளிலேயே பொங்கலிட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் நடைபெறும் பொங்கல் விழா இன்று  தொடங்கி 18-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

Trivandrum attukal bhagavathy temple pongala festival

ஒவ்வொரு நாளும் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. 9-ம் திருவிழாவான 17-ந் தேதி பொங்கல் விழா நடக்கிறது. அன்று காலை 10.50 மணிக்கு கோவிலின் பண்டார அடுப்பில் தீ மூட்டப்படும். தொடர்ந்து செண்டைமேளம் முழங்கப்பட்டதை அடுத்து லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும்.

கடந்த ஆண்டை போலவே பிரதான சாலைகளில் பெண்கள் பொங்கலிடுவதற்கு வசதியாக, போக்குவரத்து தடை செய்யப்படும். தொடர்ந்து பக்தர்கள் பொங்கலிடும் நிகழ்ச்சி தொடங்கும். இவ்விழாவில் 200 பேர் வரை பங்கேற்கலாம் என அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதே நேரம் கோவிலில் திருவிழா காலங்களில் வழக்கமாக நடைபெறும் வழிபாடுகள் மற்றும் பண்டார ஓட்டம் ஆச்சாரமுறைப்படி நடைபெறும் என்று கூறினார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios