முதல் திருநங்கை பொம்மை
பொம்மைகள் இதுவரை பல வடிவங்களில், பல உருவங்களில், விளையாட்டு பொம்மைகள் செய்யப்பட்டு வந்தது.குறிப்பாக, ஆண் பெண் பொம்மைகள் மட்டுமே இதுவரை அனைத்து இடங்களிலும் , மால்களிலும் வைக்கப்படுவது வழக்கம் . இந்நிலையில், ஒரு திருநங்கை போன்ற பொம்மை முதல் முறையாக தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டோனர் என்னும் சிறந்த பொம்மை :
அமெரிக்காவை சேர்ந்த இளம் திருநங்கையான ஜாஸ் ஜென்னிங்ஸை மாடலாக வைத்து, கிங்ஸ்டனில் உள்ள டோனர் எனும் பொம்மை நிறுவனம் திருநங்கை வடிவிலான பொம்மைகளைத் தயாரித்துள்ளது. இதன்மூலம் திருநங்கைகள் குறித்த நேர்மறை எண்ணங்கள் மக்களிடம் ஏற்படும் என்று ஜாஸ் ஜென்னிங்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பொம்மையின் அளவு :
பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்டுள்ள இந்த பொம்மை 18 அங்குல உயரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.6,000த்துக்கு ( 89.99 அமெரிக்க டாலர்கள்) விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
