ரயில் பயணம் நம் அனைவருக்கும் பிடிக்கும் ஆனால், ஆனால் ரயிலில் வழங்கப்படும் உணவுகள் அனைவருக்கும் பிடிக்குமா என்றால்.... கேள்விகுறி தான் ...!
ஆனால் இந்த கவலை இனி இல்லை..... நாம் விரும்பிய உணவை , தேவையான நேரத்தில், நம் இருக்கைக்கே வந்து கொடுக்க தயாராகி விட்டது பல உணவகங்கள்........
இதற்கான முழு முயற்சியில், இந்தியன் ரயில்வே சில உணவகங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது என்பது குறிபிடத்தக்கது. .
இதன்படி பயணிகள் தங்களுக்கு பிடித்த உணவுகளை, ரயில்வேயுடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட உணவகங்களில் இருந்து அவை இருக்கும் ஊர்களுக்கு அருகில் உள்ள ரயில் நிலையங்கள் வழியாக செல்லும்போது பெற்றுக்கொள்ளலாம்.
அதாவது, ரயில் நிலையத்தில் ரயில் நின்றதும், 2 நிமிடங்களில் பயணிகள் ஆர்டர் செய்த உணவு அவர்கள் இருக்கும் பெட்டிக்கே வந்து சுடச்சுட உணவு வழங்கப்படும். அப்போது அதற்கான தொகையை செலுத்தினால் போதும்.
இ-கேட்டரிங் என்ற இந்த திட்டம் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. இதன் அடுத்த கட்டமாக பேஸ் கிச்சன் எனப்படும் ரயில் நிலைய உணவகங்களை நிறுவப்பட உள்ளதாகதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
இதனை தொடர்ந்து, மொபைல் ஆப்ஸ் மூலமாகவும் உணவுகளை ஆர்டர் செய்யலாம் என்பது கூடுதல் சிறப்பு .
