too hot in vellore
கோடை காலம் தொடங்கிய நாள் முதலே வெயிலின் தாக்கம் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது . பொதுவாகவே வேலூர் என்றால் வெயிலுக்கு தான் பிரபலம் . அந்த வகையில் தமிழகத்தில் மற்ற மாவட்டத்தை விட , வேலூரில் வெயிலின் தாக்கம் எப்பொழுதும் அதிகம் தான் .
இதற்கு முன்னதாக உலக வானிலை மையம் இந்த ஆண்டு தட்பவெட்ப நிலையில் 5௦ சதவீத மாற்றம் இருக்கும் என தெரிவித்தது . பின்னர் ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையமும் இதே போன்ற கருத்தை முன் வைத்தது .
அதற்கு அடுத்தப் படியாக இந்திய வானிலை ஆய்வு மையமும், இந்தியாவில் இந்த ஆண்டு கடும் வெயில் நிலவும் என தெரிவித்தது . இதன் காரணமாக மக்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கேற்றார் போல், நேற்று வேலூரில் 106 டிகிரி வெப்பம் பதிவாகியது. வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினார்கள்.
மே மாதம் தொடங்கும் முன்பே தற்போதே இந்த அளவிற்கு வெப்பம் நிலவுவதால், அடுத்த மாதம் எந்த அளவிற்கு வெப்பம் நிலவப் போகிறதோ என்ற பீதி கிளம்பியுள்ளது .
