புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் தக்காளி விலை கிடு கிடு உயர்வை கண்டுள்ளது.

கடந்த 14 ஆம் தேதி புல்வாமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 44 வீரர்கள் பலியாயினர். அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் எழுந்த கண்டனங்கள் 
எழுந்தது. பின்னர் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்து வந்த தக்காளியை முற்றிலுமாக நிறுத்தி விட்டனர் வியாபாரிகள்.

அதன் படி மத்திய பிரதேசம் மற்றும் டெல்லி மாநில விவசாயிகள் தக்காளி ஏற்றுமதியை முற்றிலும் நிறுத்தி விட்டதால் பாகிஸ்தானில் தக்காளி வரத்து வெகுவாக குறைந்து ஒரு கிலோ தக்காளி விலை 250 ரூபாயாக உயர்ந்தது.

பொதுவாக பாகிஸ்தானுக்கு தினமும் 50 முதல் 70 லாரிகளில் இந்தியாவிலிருந்து தக்காளிகள் அனுப்பப்படும். ஆனால் தற்போது முற்றிலும் நிறுத்தி விட்டதால் பாகிஸ்தானில் தக்காளி விலையோ முற்றிலும் உயர்ந்து உள்ளது. அதுமட்டுமல்லாமல், மற்ற பிற பச்சை மிளகாய் ரூ.160 சிவப்பு மிளகாய் ரூ.300, இஞ்சி ரூ.150 , உருளைக்கிழங்கு ரூ.70 ,வெங்காயம் ரூ.90, கத்திரிக்காய், வெண்டைக்காய் மற்றும் சிம்லா மிளகாய் ரூ.110 கும் விற்பனையாகிறது.இதனால் அங்குள்ள பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்