tomato kg rs 2 only in ariyaloor
தக்காளி கிலோ 2 ரூபாய்..! கண்ணீரோடு கோரிக்கை வைக்கும் விவசாயிகள்..!
தக்கலை விலை கடந்த சில நாட்களாக,தொடர் சரிவை கண்டு வருகிறது.
இதன் காரணமாக சாதாரணம மக்கள் பெருமளவில் நன்மை அடைந்து வந்தாலும், விவசாய பெருமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
செடிகளை பராமரித்து முழுக்க முழுக்க விவசாயத்தில் தினந்தோறும் இரவும் பகலும் கஷ்டப்பட்டு உழைத்ததற்கான முழு பயன் விவசாயிகளுக்கு கிடைக்க வில்லை என்பது தான் வருத்தம்.
அதன்படி,அரியலூர் காய்கறி சந்தையில் கடந்த வாரம் தக்காளி ஒரு கிலோ விலை 5 ரூபாய் என இருந்தது. தற்போது கிலோ 2 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இதன் காரணமாக மிகவும் வருத்தத்தில் உள்ள விவசாயிகள்,அரசே முன் வந்து கோவில் அன்னதானதிற்கும்,பள்ளிகளில் சத்துணவு செய்வதற்கும் தங்களிடம் நேரடியாக வந்து, கொள்முதல் செய்துகொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் அரியலூர் விவசாய சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
