ஆகஸ்ட் இன்று; 29-08-2019, ஆவணி 12, வியாழன், தேய்பிறை சதுர்த்தசி திதி இரவு 07.55 வரை பின்பு அமாவாசை. ஆயில்யம் நட்சத்திரம் இரவு 08.11 வரை பின்பு மகம். சித்தயோகம் இரவு 08.11 வரை பின்பு அமிர்தயோகம்.  நேத்திரம் - 0. ஜீவன் - 0. போதாயண அமாவாசை. நவகிரக வழிபாடு நல்லது. இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

ராசி பலன்கள்....  மேஷ ராசி இன்று நீங்கள் செய்ய நினைக்கும் காரியங்கள் மற்றவர்கள் தலையீட்டால் தடைப்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்க தாமதமாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடன் பிறப்புகளால் அனுகூலம் உண்டாகும்.

ரிஷப ராசி நண்பர்களே இன்னைக்கு உங்க குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். வேலையில சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கு. பசங்க  மூலமா நல்ல செய்தி கிட்டும். பிசினஸ் சம்பந்தமா வெளியூர் பயணங்களால நல்லது நடக்கும்.

மிதுன ராசிக்காரர்களே இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். குடும்பத்தில் பெண்கள் காஸ்ட்லி பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவாங்க பர்ஸை உஷாரா வச்சிக்கோங்க. பர்ஸ் இல்லாதவங்களுக்கு செம்ம காட்டு நிச்சயம், வேலையில் உங்களுக்கு இருந்த போட்டி பொறாமைகள் விலகும். நல்ல காரியம் நடத்த முயற்சிகள் நற்பலனை கொடுக்கும்.

கடக ராசிக்காரர்களே நீங்க நெனச்ச காரியம் நெனச்சபடியே நிறைவேறும். பசங்க பாசமா இருப்பாங்க. வேலையில உங்கள் உழைப்பிற்கேற்ப நற்பலன்கள் கிடைக்கும். பெரியவங்க கூட உங்களுக்கு இருந்த பழையகருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூக உறவு ஏற்படும். வருமானம் மானாவாரியா வரும் வாய்ப்பு இருக்கு.

சிம்ம ராசிக்கார சிங்கங்களே இன்னிக்கு காசு கொஞ்சம் வரும். குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். கேட்டு,நடந்துக்கோங்க, வாய் விட்டா காலி, பூரி கட்டை போன்ற பயங்கரமான ஆயுதங்களை மறச்சு வைப்பது நல்லது. ஆபீஸ்ல கூட வேல பாக்குறவங்க ஹெல்ப் பண்ணுவாங்க . தோஸ்த் பார்ட்டிக்கு கூப்பிடுவான், உசுப்பேத்திவிடுவான்   நீங்களும் ஹேப்பியா இருப்பீங்க.

கன்னி ராசி, இன்னைக்கு  உங்க திறமைகளை வெளிபடுத்தும் நல்ல நாள். குடும்பத்தில் செலவு கொஞ்சம் இருக்கும். வேலையில் உடன் கூட வேலை செய்யுற சிலரால இருந்த கருத்து பிரச்சனை நீங்கும். பிசினஸ் சம்பந்தமா கேஸ் இருந்தா வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

துலாம் ராசிக்காரர்களே வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அமோகமாக இருக்கும். உத்தியோகத்தில் ஆபீஸர்ஸ் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். குடும்பத்தில் புத்திர வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புதுசா ஏதாவது பொருள் வாங்குவீங்க.

விருச்சிக ராசிக்காரர்களே, இன்னைக்கு உங்க வேலைல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். சொந்தக்காரங்ககிட்ட தேவையில்லாம பிரச்சனை வரும். அப்புறம் ஒரு விஷயம் உங்க உடம்ப நல்ல பாத்துக்கோங்க. தோஸ்த் கொடுக்குற ஐடியா உங்க பிஸினஸ்க்கு ஒர்க் அவுட் ஆகும். கூட பொறந்தவங்களால நல்லது நடக்கும்.

தனுசுகாரர்களே, இன்னைக்கு உங்க ஃ பேமிலில சிறப்பான தரமான சம்பவம் ஒன்னு கண்டிப்பா நடக்கும்.  கல்யாண மேட்டர்ல நல்ல முன்னேற்றம் இருக்கும். கூட்டாளிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் பிசினஸ் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.  

மகர ராசி நண்பர்களே  உங்க ஃ பேமிலில  இன்னிக்கி சிறப்பான சம்பவங்கள் நடக்கும். கல்யாண விஷேஷம் வச்சிருந்தா அதுல நல்ல முன்னேற்றம் ஏற்படும். கூட்டாளிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் பிஸினஸ்ல வளர்ச்சிக்கு பெருசா ஹெல்ப் பண்ணும் . ஆபீஸ்ல வேலைபளு குறையும். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். 

கும்பம் ராசிக்காரங்களுக்கு  இன்னைக்கு உங்களுக்கு இருக்கும் மனக்குழப்பங்கள் தீர்ந்து, நிம்மதியா இருப்பீங்க. ஸ்கூலுக்கு போற பசங்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகமாகும். பிஸினஸ்ல கூட்டாளிகளின் ஆதரவுடன் புதிய வாய்ப்புகளை கிடைக்கும். நல்லகாரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கூட பிறந்தவங்களால நல்லது நடக்கும் பாத்துக்கோங்க.

மீனம் ராசிக்கார நண்பர்களே, இன்னைக்கு வேலையில நீங்க எதிர்பார்க்காத நேரத்துல வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி இருக்கும். உங்க வீட்டுக்கு விருந்தாளி வருவாங்க செலவு ஆகும் அதனால் காசு ரெடி பண்ணி வச்சிக்கோங்க. நீங்க பண்ற பிஸினஸ்ல சின்ன சின்னதா மாற்றம் செஞ்சா நல்ல லாபம் கிடைக்கும். தெய்வ தரிசனம் மனதிற்கு நிம்மதியை தரும். உங்க தோஸ்த் உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவாரு.