மேஷம் முதல் மீனம் ராசி  வரைக்கும் இன்றைய  ராசிபலன் எப்படி உள்ளது என்பதை பார்க்கலாம்.

மேஷம் ராசி நேயர்களே..!

இன்றைக்கு நீங்கள் கட்டாயம் இறைவனை பிரார்த்திக்க வேண்டும். எதிர்பாராத விதத்தில் விரயங்கள் ஏற்படலாம். கொடுக்கல் வாங்கல்களில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது.

ரிஷப ராசி நேயர்களே !

திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உங்களுக்குப் பிடித்த விலை உயர்ந்த பொருட்களை வாங்க ஏற்ற நாள் இது.

மிதுன ராசி நேயர்களே!

உங்களுடைய சேமிப்பை உயர்த்தும் நாள் இது. பணிபுரியும் இடத்தில் இருந்து வந்த பகை சற்று விலகும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது சிறந்தது.

கடக ராசி நேயர்களே! 

உங்களுக்கு தேவையான பண வரவு இன்று திருப்தியாக இருக்கும். தடைகள் இருக்காது. உங்களுடைய தொழில் வளர்ச்சி மேலோங்கி நிற்கும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய நிலை வரலாம்.

சிம்ம ராசி நேயர்களே! 

இன்று நல்ல விஷயம் உங்களை தேடி வரும். புதிய தொழில் தொடங்க ஆர்வம் காணப்படும்.

கன்னி ராசி நேயர்களே! 

இன்று உங்களுக்கு செலவு ஏற்படும். சகோதரன் மூலமாக உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். இன்று பெரியவர்களின் அறிவுரையை கேட்டு அதன்படி நடந்து கொள்வது நல்லது.

துலாம் ராசி நேயர்களே!

கலகலப்பான செய்தி வந்து உங்களை சேரும். வரவு திருப்தியாக இருக்கும். கொள்கை பிடிப்போடு செயல்படுவீர்கள் உங்களை விட்டு விலகிச் சென்றவர்கள் உங்களை நாடி வருவார்கள்.

விருச்சிக ராசி நேயர்களே!

புகழ் வந்து சேரும் நாள் இது. வீடு மாற்றம் இடமாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும்.

தனுசு ராசி நேயர்களே!

இன்று நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். வேலைப்பளு அதிகமாக இருக்கும். யாரிடமும் வாக்கு கொடுக்கும் முன் பலமுறை யோசித்து வாக்கு கொடுப்பது நல்லது.

மகர ராசி நேயர்களே !

தொழில் வளர்ச்சி கூடும் நாள். எதிர்பார்த்த பணவரவு வந்து சேரும். குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சினை தீரும் நாள்.

கும்ப ராசி நேயர்களே!

நீங்கள் இதுநாள்வரை மேற்கொண்டு வந்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கும். மனக்குழப்பம் அகலும்.

மீனராசி நேயர்களே!

ஆடை ஆபரணம் வாங்க உகந்த நாள் இன்று. உங்களின் நல்ல தகவல் தேடி வரலாம் புது புது நண்பர்கள் அறிமுகமாவார்கள் வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம்.