தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..! தனிமைப்படுத்தப்பட்டவர்கள் செய்ய வேண்டியது என்ன ?

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை தமிழக அரசு அறிவித்து உள்ளது.

உலகம் முழுக்க 16,02,619 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.95,657 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். அதாவது  கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்குகிறது என்பது  குறிப்பிடத்தக்கது. அதே வேளையில் மொத்தம் 3,55,671 பேர் இதுவரை உலகம் முழுக்க குணப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு பக்கம் இருக்க நேற்று ஒரே நாளில் 84860 பேர் உலகம் முழுக்க கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்இந்தியாவில் கொரோனா!

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 6,412ஆக உயர்ந்து உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக 199 பேர் உயிரிழந்துள்ளனர் 504 பேர் குணமடைந்துள்ளனர்

தற்போது வரையில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா - 1,364, தமிழகம் - 834, டெல்லி - 720, ராஜஸ்தான் - 463 பேருக்கு கொரோனா பாதிப்பு  உள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.இந்த ஒரு நிலையில் வீட்டில்  தனிமைப்படுத்தப்பட்டவர்கள் எப்படிப்பட்ட வழிமுறைகளை  கடைபிடிக்க வேண்டும் என  தமிழக அரசு ஒரு  லிஸ்ட் போட்டு பாயிண்ட்ஸ் தெரிவித்து உள்ளது.அதன் படி

தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு தனி கழிப்பறையுடன் கூடிய நல்ல காற்றோட்டமான தனி அறை ஒதுக்க வேண்டும்

தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் இருக்கும் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும்

தனிமைப்படுத்தப்பட்ட நபர்  எக்காரணம் கொண்டும் வீட்டைவிட்டு வெளியில் செல்லக்கூடாது , வீட்டிற்குள்ளேயே அங்குமிங்கும் செல்லாமல் தனிஅறையில் இருக்க வேண்டும்

தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு ஒருவர் மட்டுமே முககவசம், கையுறை அணிந்து பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டும்

தனிமைப்படுத்தபட்டவர் பயன்படுத்தும் பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது , தனிமைப்படுத்தப்பட்டவருடன் வயதானோர், கர்ப்பிணிகள், குழந்தைகள் எந்த தொடர்பும் கொள்ளாமல் இருக்க வேண்டும்

தனிமையில் இருப்பவரின் உடை, படுக்கை விரிப்பை தனியாக சோப்பு நீரில் ஊற வைத்து துவைக்க வேண்டும்

வீட்டை தினமும் 3 முறையாவது கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும்

மேற்குறிப்பிட்ட சில வழிமுறைகளை கடைபிடிக்கும் போது பாதிக்கப்பட்டவரிடம் இருந்து மற்றவர்களுக்கு  கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.