பெண்களே.. வீட்டில் இருப்பதால் கொடுமை செய்கிறார்களா? உடனே இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க! அரசு அதிரடி!

கொரோனா திரொலியால் தற்போது ஊரடங்கு இருப்பதால் மக்கள் அவரவர் வீட்டில் முடங்கி இருக்கும் ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வரக் கூடிய ஒரு இக்கட்டான நிலையில் வீட்டில் உள்ளவர்களுக்கு சண்டை ஏற்படுவதும், கருத்து வேறுபாடு ஏற்படுவதும் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் குறிப்பாக பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகமாக உருவாகுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதிலிருந்து பாதிக்கப்படும் பெண்களை மீட்டு பாதுகாப்பு கொடுக்கும் நடவடிக்கையில் அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. அதன் படி,

181 -பெண்கள் உதவி மையம்

1091 - காவல்துறை பெண்கள் உதவி மையம் 

122  - பெண்கள் உதவி எண் 

இந்த எண்களுக்கு தொடர்பு கொண்டு வன்முறைகளுக்கு ஆளாகும் பெண்கள் ஆலோசனை பெறலாம் என்றும், மருத்துவ உதவி பெறுவதற்கும், குறுகிய காலத்தில் தங்குவதற்கு தேவையான இடவசதி பெறுவதற்கும், சட்ட உதவி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் பெறுவதற்கும் வழிவகை செய்யப்படுகிறது. மேலும் அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தமிழக அரசு இதனை நடைமுறைப்படுத்தி உள்ளது.

குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளால் பெண்கள் பாதிக்கப்படும் போது அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் தங்குவதற்கு சிறப்பு ஏற்பாடு செய்து தருகிறது அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

அதே வேளையில் அரசும், சட்டமும் எங்களுக்கு ஆதரவாக தான் இருக்கிறது என்றும், ஆனால் ஆண்கள் பல வீடுகளில் வன்முறைக்கு ஆளாகி உள்ளதாகவும், அவர்களின் நலன் கருதி குறைந்த பட்சம் ஒரு உதவி எண்ணையாவது அரசு அறிமுகம் செய்ய வேண்டும் என ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் வக்கீல். அருள் மிதுலன், முதல்வருக்கு கோரிக்கை வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது .