செவிலியர்களுக்கு அரசு வேலை..! 1234 காலி பணியிடங்கள்..! முந்துங்கள்..! 

செவிலியர்களுக்கான காலிப்பணியிடங்களை மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் 1234 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்டோரை மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நியமனம் செய்யப்பட்டு வருகின்றது.

நேற்று  முன்தினம் 77 பிசியோதெரபிஸ்ட் பணியிடங்களுக்கான தேர்வை சென்னையில் ஐந்து இடங்களில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வை எழுதினர்.

இதனை தொடர்ந்து 1234 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தேர்வு ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த வேலையை பெற விருப்பம் தெரிவிக்கும் செவிலியர்கள் வரும் 13-ஆம் தேதிக்குள் www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.