மேல்நிலைப்பள்ளிகளுடன் ஆரம்ப்ப்பள்ளிகளும்,ந.நி.பள்ளிகள் இணைப்பு உடனடியாக அமுலுக்கு வர பள்ளிக்கல்வித்துறை அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

பள்ளிக்கல்வி ஒரே வளாகத்தில் செயல்படும் அரசு மாநகராட்சி நகராட்சி ஊராட்சி ஒன்றிய தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் நலன் மற்றும் நிர்வாக மேம்பாடு கருதி, நடுனிலை பள்ளிகளின் கல்வி செயல்பாடுகளை ஆய்வு செய்யும் அதிகாரத்தை அதே வளாகத்தில் செயல்படும் அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்குதல் தொடர்பாக ஆணை வெளியிடப்பட்டு உள்ளது.

அதன் படி, 

குறைந்தபட்ச ஆசிரியர்கள் உள்ள தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பாடத்தை போதிக்கும் ஆசிரியர்கள் இல்லாத போது உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள குறிப்பிட்ட பாட பட்டதாரி ஆசிரியர்களை அனுப்பி வைத்து கற்பித்தலை மேம்படுத்தலாம் 

உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் அறிவியல் ஆய்வக உபகரணங்களை பயன்படுத்தி தொடக்க நடுநிலைப்பள்ளி மாணவர்கள் அறிவாற்றலை மேம்படுத்தலாம்.

உயர்நிலை மேல்நிலை பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகளை பயன்படுத்தி தொடக்க நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கற்கும் திறனை ஊக்குவிக்கலாம்.

உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உடற்கல்வி ஆசிரியர்கள் மூலம் தொடக்க நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு வகுப்புகள் எடுத்து ஆர்வத்தையும் உடல்நலனையும் அதிகப்படுத்தலாம்.

உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் hi - tech வகுப்பு துவங்கி கணினி வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளதாகவும் அவற்றை தொடக்க நடுநிலை பள்ளி மாணவர்கள் பயன்படுத்தி கணினி சார்ந்த பயிற்சி பெற வாய்ப்பு ஏற்படும்.

ஒரே வளாகத்தில் உள்ள தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பாதுகாப்பை உயர்நிலை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

இவ்வாறு மாணவர்களின் நலனில் பல மாற்றங்களை கொண்டுவர பள்ளிக்கல்வித்துறை அதிரடி   நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பள்ளிகல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்ற பிறகு பல அதிரடி மாற்றத்தை கொண்டு வருகிறார் என்பது கூடுதல் தகவல்.