Asianet News TamilAsianet News Tamil

குடும்பத்துடன் திருப்பதி போறீங்களா? அப்படினா இந்த செய்தியை மறக்காமல் படிங்க..!

ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட பிறகு ரூ.300 சிறப்பு நுழைவு தரிசனம்,  இலவச தரிசனம்,  ஆன்லைனில் நடைபெறும் கல்யாண உற்சவ தரிசனம், தற்போது அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

Tirumala Tirupati Devasthanams BIG Statement
Author
Tirupati, First Published Oct 20, 2021, 10:18 PM IST

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் செல்லும் தரிசனத்திற்கு தற்போதைக்கு அனுமதியில்லை என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்;- திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவர்கள் கோயில் தெற்கு மாட வீதியில் உள்ள சிறப்பு கவுண்டர் மூலம் தினமும் இருநேரங்களில் அனுமதிக்கப்பட்டு தரிசனம் செய்து வைக்கப்படுகிறது. ஆனால், கடந்த  2020ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி முதல் கொரோனா பரவல் காரணமாக அனைத்து தரிசனமும் நிறுத்தப்பட்டது.

Tirumala Tirupati Devasthanams BIG Statement

ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட பிறகு ரூ.300 சிறப்பு நுழைவு தரிசனம்,  இலவச தரிசனம்,  ஆன்லைனில் நடைபெறும் கல்யாண உற்சவ தரிசனம், தற்போது அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், சமூக வலைதளங்களில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், ஒரு வயது குழந்தையுடன் வரும் பெற்றோர்கள் சிறப்பு கவுண்டர்கள் மூலமாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதாக தவறான தகவல், வைரலாகி வருகிறது. தற்போதைக்கு இந்த தரிசனம் தொடங்கும் எண்ணம் இல்லை. எனவே, பக்தர்கள் இதனை நம்ப வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios