Asianet News TamilAsianet News Tamil

Body fatigue: உடல் எப்போதும் சோர்வாக உள்ளதா...? சோர்வை விரட்ட நச்சுனு நாலு டிப்ஸ்..!

Body fatigue: இன்றைய நவீன வாழ்வில் துரித உணவு பழக்கம், உடல் மெலிய சாப்பிடாமல் இருப்பது போன்றவை உங்கள் உடலின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. அவை நம்மை ஆட் கொண்டுள்ளன. அவற்றில் இருந்து நாம் தப்பிப்பது அவசியம். இல்லையெனில், பல்வேறு உடல் உபாதைகளை சந்திக்க வேண்டி இருக்கும்.

Tips to overcome body fatigue
Author
Chennai, First Published Mar 2, 2022, 12:37 PM IST

இன்றைய நவீன வாழ்வில் துரித உணவு பழக்கம், உடல் மெலிய சாப்பிடாமல் இருப்பது போன்றவை உங்கள் உடலின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. அவை நம்மை ஆட் கொண்டுள்ளன. அவற்றில் இருந்து நாம் தப்பிப்பது அவசியம். இல்லையெனில், பல்வேறு உடல் உபாதைகளை சந்திக்க வேண்டி இருக்கும்.

குறிப்பாக, உங்கள் உடல் சோர்வுக்கு  உணவு பழக்கங்கள் மற்றும் பானங்கள் முதல் தவறான வாழ்க்கை முறை வரை, பல முக்கிய  காரணங்கள் உள்ளன. 

Tips to overcome body fatigue

சமீபத்திய ஆய்வின் படி, இங்கிலாந்தில் ஐந்தில் ஒருவர் எப்போதும் சோர்வாக உணர்கிறார். இதில் பெரும்பாலும் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எனவே நீங்கள் ஏன் எப்போதும் சோர்வாக உணர்கிறீர்கள் என்பதையும் அதைத் தடுக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை  அறிந்து கொள்ளலாம்.

முறையான உணவு பழக்கவழக்கம்:

Tips to overcome body fatigue

எப்பொழுதும் சோர்வாக இருப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, தவறான உணவு பழக்கம்.  நீங்கள் ஊட்டச்சத்து நிறைந்த உணவை உண்ணவில்லை என்றால்,  அவை உடலில் பல பிரச்சனைகளை உண்டுபண்ணும். பெரும்பாலான மக்கள் ஆற்றல் தேவை என்பதற்காக அதிக சர்க்கரை பொருட்களை சாப்பிடுகிறார்கள். இது தவிர, பலர் பிஸியாக இருப்பதால் காலை உணவையும் சாப்பிடுவதில்லை, அத்தகைய சூழ்நிலையில்  ஊட்டசத்து நிறைந்த உணவுகள் இல்லை என்றால்,உடல் ஆரோக்கியம் கேட்டு விடும். நீங்கள் சோர்வாக உணர முக்கிய காரணமாக அமைகிறது.

உடல் உழைப்பில்லாமை:

இன்றைய மேற்கத்திய கலாசாரம், நம்மை செல்போன், டிவி  மற்றும் இணையம் போன்ற உலகத்திற்கும் மூழ்கடிக்க வைத்துள்ளது. இவை நமக்கு பல்வேறு சிக்கல்களை தருகிறது. இணைய உலகில் மூழ்கும் மக்கள் உடற்பயிற்சி செய்வதில்லை. அவர்களுக்கு அதற்கான நேரமும் இல்லை. இன்றைய வாழ்க்கை முறையில் மொபைல்-டிவியால் மக்களின் உடல் உழைப்பு கிட்டதட்ட இல்லாமல் போய் விட்டது என்பது அனைவரும் அறிந்ததே. நீங்கள் சுறுசுறுப்பாக இல்லாமல் சோர்வாக உணர இதுவே காரணம்.

Tips to overcome body fatigue

காஃபின் அதிகமாக உட்கொள்வது:

அதிகப்படியான காஃபின் உட்கொள்வதும் சோர்வாக இருக்கும். இப்போதெல்லாம், பெரும்பாலானோரின் சோர்வாக இருக்கும்போது காபி அல்லது டீ குடிப்பது என்பது பழக்கமாகி விட்டது. இது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் ஒன்றாகும்.

எனவே, மேற்சொன்ன விஷயங்களை தவிர்க்க முடிந்தால், உடல் ஆரோக்கியமாக வைத்து கொள்ள உங்கள் தாத்தா, பாட்டி பின்பற்றிய வழிமுறைகளை கேட்டு தெரிந்து கொண்டு பின்பற்றுங்கள். அவர்களின் வழிமுறைகளை பின்பற்றி உடல் ஆரோக்கியமாக வைத்து கொள்ளுங்கள்.


 

Follow Us:
Download App:
  • android
  • ios