tips for house rent

சென்னை போன்ற மாநகரங்களில் உள்ள பெரும்பாலனவர்கள், வாடகை வீட்டில் தான் வசித்து வருகின்றனர். குறிப்பாக தங்களது கல்லூரி வாழ்கை முடித்துவிட்டு , வேலைக்காக சென்னை வருபவர்களும் , படிப்பிற்காக சென்னை வருபவர்களுமே அதிகம் .

அப்படி இருக்கும் போது, இவர்கள் தங்குவதற்கென தேர்வு செய்யும் இடமோ விடுதி அல்லது நண்பர்கள் ஒன்றாக இணைந்து தனி வீடோ எடுத்துத்தங்குவர். நாம் தங்கும் இடம் , நாம் பணி செய்யும் நிறுவனத்திற்கு மிக அருகில் இருந்தாலோ , அல்லது முக்கிய சாலைகளின் முன் பகுதியில் அமைந்திருந்தாலோ அதற்கேற்றார் போல் வாடகை தொகை மாறும் .

சரி, அப்படியென்றால் எங்கு வீடு வாகினால் அதிக வாடைக்கு விட முடியும் என சிலர் நினைப்பது உண்டு .ஆம் இப்பொழுதெல்லாம், வங்கியில் வட்டி விகிதம் குறைத்துள்ளதால், வங்கி கணக்கில்இருப்பு வைப்பது குறைந்துவிட்டது. அதற்கு மாறாக ஹவுஸிங் லோன் பெற்றாவது சொந்தமாக ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாங்குகிறார்கள் .

இதில் என்ன ஒரு அழகு என்றால், குறிப்பாக பள்ளிகளின் அருகில் வீடு வாங்க தொடங்கியுள்ளனர் . குழந்தைகளின் பாதுகாப்பை கருதியும், ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்குள் வீடு இருந்தால் தான் குழந்தைகளுக்கு பள்ளியில் அட்மிஷன் கிடைக்கும் என்பதாலும் வீடு வாங்கி வாடகை விட தொடங்கியுள்ளனர் .

இதன் காரணமாக , குடும்பத்தோட குடிபுகும் மக்கள் , வீட்டின் வாடகையை பொருட்படுத்தாமல் கண்ணை மூடிக்கொண்டு, கேட்கும் தொகையை வாடகையாக தருகின்றனர். எனவே பள்ளிகளின் அருகில் வீடு வாங்க பெரும்பாலான மக்கள் விருப்பம் தெரிவிக்கின்றனர் .