Asianet News TamilAsianet News Tamil

Pongal Special : தை பொங்கல் திருவிழா.. தமிழர் கலாச்சார பெருவிழா! பொங்கல் வைக்க நல்ல நேரம் எப்போது?

தமிழர் திருநாளாம் தை பொங்கல், பண்டிகை தை மாதம் முதல் தேதி அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.

Time to celebrate pongal festival
Author
Chennai, First Published Jan 13, 2022, 2:17 PM IST

தமிழர் திருநாளாம் தை பொங்கல், பண்டிகை தை மாதம் முதல் தேதி அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. பொங்கல் என்பதற்கு பொங்கி வழிதல் பொங்குதல் என்பது பொருள். தமிழகத்தில் சாதி, மதம், பேதம் இன்றி அனைவராலும் கொண்டப்படும்  சிறப்பு வாய்ந்த பண்டிகை பொங்கலாகும். எல்லா ஆண்டும் பொங்கல் திருநாளில் நம் வீட்டில் சர்க்கரை பொங்கல் வைத்து, சூரிய பகவானிடம் வழிபட்டு உண்பது வழக்கம். அதாவது புதிய பானையில், புத்தரிசியிட்டு, அரிசியில் இருந்து பால் பொங்கி வழிந்து பொங்கி வருவதால், தை பிறந்துள்ள புத்தாண்டு முழுவதும் நம் வாழ்வும், வளமும் அந்தப் பால் போன்று பொங்கி சிறக்கும் என்பது நம்பிக்கை. இந்த பண்டிகையை  வெகு விமர்சையாக கொண்டாடி மகிழ்வதற்கு, மக்கள் தங்கள் வீட்டை அலங்கரிப்பதோடு மட்டுமல்லாமல் மண் பானைகள், கரும்புகள், இலைகள், அரிசி மாவில் செய்யப்பட்ட ரங்கோலி உள்ளிட்டவற்றோடு சிறப்பாக தயாராகி வருகின்றனர்.

பொங்கல் நாளில் அதிகாலை எழுந்து குளித்து விட்டு, புத்தாடையில் மஞ்சள் வைத்து உடை அணிந்து, கரும்பை அருகில் வைத்து விளக்கு ஏற்றி, பொங்கல் வைக்கும் பானையில் மஞ்சள் மற்றும் குங்குமம் தடவி, மா இலைகள் கட்டி பொங்கலை செய்வார்கள். அந்த பொங்கல் பொங்கி வந்ததும், மக்கள் பொங்கலோ பொங்கல் என்று மகிழ்ச்சியாகவும் சத்தமுடனும் கூறுவார்கள். பிறகு சூரிய பகவானுக்கு நன்றி சொல்லி   உறவினர்களுடன் உண்டு மகிழ்வர். 

 மாட்டுப்பொங்கல் நாளில் கிராமப்புறங்களில் வெகு விமர்சையாக இருக்கும். மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவித்து, பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர். அன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளைக் குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு  வண்ணம் பூசி, கூரான கொம்பில் சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்துக்குத் தோலிலான வார் பட்டையில் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள்.  

Time to celebrate pongal festival


 
காணும் பொங்கலன்று உறவினர்களுடன் கூடி மகிழ்வார்கள். காணும் பொங்கல் நாளில் கிராமங்களில் மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு, சருக்குமரம் ஏறுதல் போன்று பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் களைகட்டும். ஜல்லிக்கட்டு விளையாட்டு உலகம் முழுவது புகழ் வாய்ந்த ஒன்றாகும்.

அப்படியான தைத்திருநாள் வழக்கமாக 1-ந்தேதி அன்று அதிகாலையிலோ அல்லது நள்ளிரவிலோ பிறந்துவிடும்.  
 
நாளை தை 01 - தைப் பொங்கல் வைக்க நல்ல நேரம் (வெள்ளிக்கிழமை):

மதியம் 12.00 - 01.30 வரை

மாலை 04.30 - 06.00 வரை

தை 02 - மாட்டுப் பொங்கல் வைக்க நல்ல நேரம் (சனிக்கிழமை)

காலை 07.30 - 09.00

காலை 10.30 - 12.00

தை 03 - காணும் பொங்கல் வைக்க நல்ல நேரம் (ஞாயிறு)

காலை 07.30 - 09.00

காலை 10.30 - 12.00

பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி மகிழ்வதற்கு, அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!
 

Follow Us:
Download App:
  • android
  • ios