சிக்கலான பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காணும் நாள் இது. வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல தகவல் வந்தடையும்.

துலாம் முதல் மீனம் வரை ராசிப்பலன்..! 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

துலாம் ராசி நேயர்களே....!

சிக்கலான பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காணும் நாள் இது. வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல தகவல் வந்தடையும்.

விருச்சிக ராசி நேயர்களே...! 

புதிய முயற்சிகள் நீண்ட இழுபறிக்குப் பின்னர் நடக்கும். சிலரின் தவறான செயல்களை எண்ணி நீங்கள் வருத்தப்படுவீர்கள். உடல்நலம் பாதிக்க வாய்ப்பு உண்டு. உஷாராக இருப்பது நல்லது

தனுசு ராசி நேயர்களே..! 

கேட்ட இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். நண்பர்கள் வட்டம் விரிவடையும். சகோதர வகையில் ஒற்றுமை அதிகரிக்கும். ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழும் நாள் இது.

மகர ராசி நேயர்களே..! 

உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டு பேசும் நாளிது. அரசு காரியங்களில் இருந்த இழுபறி நிலை மாறி நல்ல செய்தி உங்களை வந்தடையும். வெளியூர் பயணத்தால் சில அலைச்சலை சந்திக்க நேரிடலாம்.

கும்ப ராசி நேயர்களே...!

உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். நினைத்த காரியங்கள் நிறைவேறும் நாள் இது. உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள்.

மீனம் ராசி நேயர்களே..!

கடின உழைப்பால் இலக்கை எட்டிப் பிடிக்கும் நாளிது. தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். விருந்தினர் வருகை உண்டு. உங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.