துலாம் முதல் மீனம்  வரை..! இந்த வாரம் உங்களுக்கு இப்படி ஒரு அமோகமாக இருக்குமாம்! 

துலாம் ராசி நேயர்களே!

இந்த வாரம் முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றங்கள் உண்டாகும். எடுத்த காரியங்கள் அனைத்தும் நன்மையாக முடியும். வெளியூர் பயணங்கள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் அதிக அளவில் லாபத்தை எதிர்பார்க்கலாம். புதிய வேலை தொடர்பான முயற்சிகள் நன்மையில் முடியும். பெண்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். எடுத்த காரியங்களில் சாதகமான பலன் பெறுவீர்கள். புதிய அறிமுகங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு தேவைப்படும் உதவிகள் கிடைக்கும்.

விருச்சிக ராசி நேயர்களே!

இந்த வாரம் எல்லாவிதமான நல்ல பயன்கள் உங்களை வந்தடையும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகமாகும். மேலதிகாரிகளின் பாராட்டும் ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். கலைத்துறையினருக்கு பேச்சின் இனிமையால் நன்மைகள் நடக்கும். அரசியல் வாதிகளுக்கு தொண்டர்களால் பிரச்சினைகள் எழலாம். உடன் இருப்பவர்களால் நிம்மதி குறைய கூடிய சூழ்நிலை உருவாகும். எதிர்பார்த்த காரியங்கள் நல்லபடியாக முடிய கடினமாக பணியாற்ற வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு உடனிருப்பவர்கள் உடன் இருந்த போட்டிகள் விலகும்.

தனுசு ராசி நேயர்களே!

இந்த வாரம் எதிர்பார்த்த காரியங்கள் வெற்றிகரமாக நடந்து முடியும் தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி காணப்படும். வாடிக்கையாளர்களிடம் கவனமாகவும் சாந்தமாகவும் உரையாடுவது வியாபாரத்தை அதிகரிக்கும். எளிமையால் மற்றவர்களின் பாராட்டை பெறுவீர்கள். உங்களுக்கு சொந்தமான பொருளை இழக்க நேரிடலாம். பெண்களுக்கு மற்றவரின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நன்மையைத் தரும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். அரசியல்வாதிகளுக்கு தேவையான உதவிகள் கிடைக்கப்பெறுவீர்கள். நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம்.

மகர ராசி நேயர்களே!

இந்த வாரம் சுமாரான பலன் கிடைக்கும். பணவரவு வரும். எடுத்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். தேவையான உதவிகள் தாமதமாக கிடைக்கும். பெண்களுக்கு எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். மற்றவர்கள் பிரச்சனைகளில் தலையிடுவது தவிர்க்கவேண்டும். கலைத்துறையினருக்கு எதையும் சாதிக்கும் திறமை அதிகரிக்கும். நினைத்த இடத்தில் இருந்து பணவரவு இருக்கும்.

கும்ப ராசி நேயர்களே!

இந்த வாரம் பணவரவு அதிகமாக இருக்கும். உங்களை எதிர்த்து செயல்பட்டவர்கள் ஒதுங்கிவிடுவார்கள். தொழில் வியாபாரத்தில் பயணங்கள் அதிகரிக்கும், செலவுகள் அதிகரிக்கும். பெண்கள் மற்றவர்கள் நலனில் அக்கறையுடன் இருப்பீர்கள். 

கலைத்துறையினருக்கு மேற்கொள்ளும் முயற்சியால் வெற்றி உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு முக்கிய முடிவு எடுப்பதில் சிக்கல்கள் வரலாம். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கலாம்.

மீனராசி நேயர்களே!

இந்த வாரம் மனசோர்வு உண்டாகலாம். கவலையின்றி வேலையைத் தொடருங்கள். எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டாகும் தொழில் வியாபாரம் வெற்றிகரமாக நடக்கும் அரசாங்க காரியங்களில் பலன் தரும். உத்தியோகஸ்தர்களுக்கு, புதிய வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்சினைகள் தீரும். எதிர்ப்புகள் அகலும்.சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் மாணவர்களுக்கு படிப்பில் கவனம் தேவை.