துலாம் முதல் மீனம் வரை ராசிப்பலன்..! 
 
துலாம் ராசி நேயர்களே...!

உங்களுக்கு இருந்து வந்த எதிர்ப்புகள் சற்று அடங்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். திடீர் பயணங்கள் ஏற்படும். உங்களுக்கு நண்பர்கள் பேராதரவு கொடுப்பார்கள். 

விருச்சிக ராசி நேயர்களே...!

பிள்ளைகளின் திறமையைக் கண்டறிந்து அதற்கேற்றவாறு ஊக்கப்படுத்துவீர்கள். வீடு கட்டுவது... பொருட்களை வாங்குவது போன்ற நல்ல விஷயங்களில் ஈடுபடுவீர்கள். புது வாகனம் வாங்க கூடிய சூழல் உருவாகும்.

தனுசு ராசி நேயர்களே...!

உங்களுடைய புத்திசாலித்தனத்தால் பல வேலைகளை செய்து முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த ஒரு தொகை உங்களுக்கு வந்தடையும்.

மகர ராசி நேயர்களே...!

எதிர்பார்த்த பணவரவு இருக்கும். ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்கள் சிலரின் சுயரூபத்தை தெரிந்து கொண்டு அதற்கேற்றவாறு நடந்து கொள்வீர்கள். திடீரென பயணங்கள் மேற்கொள்ள நேரிடலாம்.

கும்ப ராசி நேயர்களே...!

பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வேறு ஒரு வீட்டிற்கு குடிபெயர நேரிடலாம்.

மீன ராசி நேயர்களே...!

ஒருவிதமான படபடப்பு உங்களுக்கு இருக்கும். எதையோ இழந்ததைப் போன்ற உணர்வு இருக்கும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த பனிப்போர் சற்று விலகும்