துலாம் முதல் மீனம் வரை ராசிப்பலன்..! 

துலாம் ராசி நேயர்களே...!

உங்களுடைய செல்வாக்கு வெளிவட்டாரத்தில் அதிகரிக்கும். உங்கள் பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். பழைய நண்பர் ஒருவரை சந்திப்பீர்கள்.

விருச்சிக ராசி நேயர்களே...!

பணவரவு எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். பழைய கடனை வசூலிப்பது குறித்து யோசனை செய்வீர்கள். குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படும்.

தனுசு ராசி நேயர்களே...!

வாகனத்தில் அதிக வேகமாகச் செல்லக் கூடாது. யாருக்கும் எந்த உறுதிமொழியும், உதவி செய்வதாகவும் உத்தரவாதம் கொடுக்க வேண்டாம். கூடுதல் செலவுகள் திடீரென ஏற்படும்.

மகர ராசி நேயர்களே..!

உங்களுடைய திறமைகள் வெளிப்படும் நாள் இது. யாரிடத்திலும் திறமையாக பேசி எல்லோருடைய மனதிலும் இடம் பிடித்து காட்டுவீர்கள்.

கும்ப ராசி நேயர்களே...!

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்த ஒரு வழக்கிற்கு தீர்ப்பு கிடைக்கும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் கூட உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வாகனம் செலவு அதிகரிக்க நேரிடலாம்.

மீனராசி நேயர்களே...!

முன்கோபம் அதிகமாக இருக்கும். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். பிள்ளைகளின் நலனில் அதிக அக்கறை காட்ட தொடங்குவீர்கள் பணவரவு தேவையான அளவிற்கு இருக்கும்