துலாம் முதல் மீனம் வரை ராசிபலன்..!

துலாம் ராசி நேயர்களே...!

குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை இருக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். வாகனச் செலவு ஏற்படலாம். திடீர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

விருச்சக ராசி நேயர்களே...!

உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. உறவினர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். திடீரென வெளியூர் செல்ல வேண்டிய சூழல் உருவாகும்.

தனுசு ராசி நேயர்களே...!

சகோதர வகையில் உங்களுக்கு உதவி கிடைக்கும்.கல்யாண பேச்சு வார்த்தை வரும். பண வரவு இருக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். பதவியில் இருப்பவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.

மகர ராசி நேயர்களே..!

அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். பங்கு வர்த்தகம் சுமுகமாக நடைபெறும். கடன் பிரச்சினை கட்டுக்குள் வரும்.

கும்ப ராசி நேயர்களே...!

புதிய வாய்ப்புகளும் பொறுப்புகளும் உங்களை தேடி வரும். முயற்சி எடுக்கும் அனைத்தும் வெற்றியில் முடியும். ஆடம்பர செலவுகளை குறைப்பது மிகவும் நல்லது.

மீனராசி நேயர்களே..!

கடின உழைப்பின் மூலம் வெற்றியை பெறுவீர்கள். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.