துலாம் முதல் மீனம் வரை ராசிபலன்..! 

துலாம் ராசி நேயர்களே..!

யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க கூடாது. உங்களுக்கு நெருங்கியவர்கள் உங்களை உதாசீனப்படுத்துவார்கள். இருந்தாலும் மனம் தளர வேண்டாம்.பணி சுமை அதிகரிக்க நேரிடும்.

விருச்சிக ராசி நேயர்களே..!

நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். பிள்ளைகளால் மதிப்பு உயரும் வீடு வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள்.

தனுசு ராசி நேயர்களே..!

அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள்.பழைய சொந்த-பந்தங்கள் உங்களை தேடி வருவார்கள். நீங்கள் எடுக்கும் எந்த முடிவும் மற்றவர்களால் ஏற்றுக் கொள்ளும்படி இருக்கும்.

மகர ராசி நேயர்களே....!

உங்களை சுற்றி இருப்பவர்களை பற்றி தெரிந்து கொள்ளும் நாள் இது. நட்பு வழியில் நல்ல செய்தி உங்களை வந்தடையும். நீண்ட நாள் கனவு நிறைவேறும். ஆன்மீகத்தில் அதிக நாட்டம் இருக்கும்.

கும்ப ராசி நேயர்களே..!

திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். திடீர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம். எதிர்பார்த்த பணம் உங்களை வந்தடையும் 

மீன ராசி நேயர்களே...!

சகோதர வகையில் நன்மை உண்டு. குடும்பத்தினரின் விருப்பங்களை அறிந்து அதற்கேற்றவாறு செயல்படுவீர்கள். பூர்வீக சொத்து உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உண்டு.