துலாம் முதல் மீனம் வரை ராசிப்பலன்..! 

துலாம் ராசி நேயர்களே...!

உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கக்கூடிய நாள் இது.கடமையில் இருந்த தொய்வு அகலும். பக்குவமாக பேசி காரியங்களை சாதித்துக் கொள்ள கூடிய திறமை பெற்றவர்கள் நீங்கள். வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படலாம். செய்யும் தொழிலில் லாபம் ஏற்படும். 

விருச்சிக ராசி நேயர்களே..! 

உங்களுடைய வரவு இருமடங்காக உயரும். வாழ்க்கையில் உங்களுக்கு தேவையான சிலவற்றை பூர்த்தி செய்து கொள்வீர்கள். அரசியல்வாதிகளாலும் உங்களுக்கு அனுகூலம் உண்டாகும்

தனுசு ராசி நேயர்களே..! 

தொழில் தொடங்க அதிக ஆர்வம் காட்டுவீர்கள். எப்போதும் பரபரப்போடு செயல்படுவீர்கள். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

மகர ராசி நேயர்களே..!

அலைச்சல்கள் அதிகரிக்கும் நாள். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். திடீரென செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும்

கும்ப ராசி நேயர்களே...!

உங்களது சகோதரர்களுடனான நட்பு அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும். பழைய வாகனத்தை கொடுத்து புதிய வாகனத்தை வாங்க திட்டமிடுவீர்கள்.

மீன ராசி நேயர்களே...! 

பொதுக் காரியங்களில் ஈடுபட்டு புகழை சேர்க்கும் நாள். சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு அதிகரிக்கும். பண வரவு திருப்தியாக இருக்கும்.