துலாம் முதல் மீனம் வரை ராசிப்பலன் ..! 

துலாம் ராசி நேயர்களே...!

வைராக்கியத்தோடு செயல்பட்டு உங்களுடைய வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள். உங்களுடைய பொறுமைக்கு இன்று பெருமை வந்து சேரும். வருமானம் போதுமானதாக இருக்கக்கூடும். கொடுக்கல் வாங்கல் அனைத்தும் ஒழுங்காக மாறும்.

விருச்சக ராசி நேயர்களே...!

இன்று நீங்கள் மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். கேட்ட இடத்திலிருந்து அனைத்து உதவியும் உங்களுக்கு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்காலத்தைப் பற்றி முழு சிந்தனை செலுத்துவீர்கள்.

தனுசு ராசி நேயர்களே...!

உங்களுடைய நண்பர்களால் நன்மை ஏற்படக்கூடிய வாய்ப்பு உண்டு. இடமாற்றத்தை பற்றி சிந்திப்பீர்கள். அடுத்த கட்ட தொழில் வளர்ச்சி பற்றி திட்டமிடுவீர்கள். மற்றவர்களுக்கு சொல்லும் யோசனைகள் மாபெரும் வெற்றியை தரும்.

மகர ராசி நேயர்களே...!

இன்று உங்களுக்கு நல்ல வரவை எதிர் பார்க்கலாம். நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள்.

கும்ப ராசி நேயர்களே..! 

உங்களுடைய தைரியம் அதிகரிக்கும். வீட்டை சீரமைப்பது பற்றிச் சிந்திப்பீர்கள். புதிய தொழில் தொடங்க யோசனை செய்வீர்கள். சகோதர வகையில் உங்களுக்கு சில பிரச்சனைகள் வர வாய்ப்பு உண்டு.

மீனராசி நேயர்களே...!

உங்களுக்கு ஆரோக்கிய குறைபாடு ஏற்படலாம். கடனாக கொஞ்சம் பணம் மற்றவர்களிடமிருந்து வாங்கக் கூடிய சூழல் ஏற்படலாம்.