துலாம் முதல் மீனம் வரை ராசிப்பலன் ..!

துலாம் ராசி நேயர்களே...!

வேலைச்சுமை அதிகரிக்கும். அடுத்தவர்கள் மனசு காயப்படும்படி பேசாதீர்கள். யாரை நம்புவது என்கிற குழப்பத்திற்கு ஆளாவீர்கள். திடீர் பயணங்கள் ஏற்படலாம்.

விருச்சிக ராசி நேயர்களே..!

விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள் உறவினர்கள் நண்பர்களுடன் சில சங்கடங்கள் ஏற்படும். வாகன தொந்தரவு ஏற்படலாம்.

தனுசு ராசி நேயர்களே..!

எதையும் முடிக்கும் திறன் கொண்டவர்களாக விளங்குவீர்கள். பெற்றோர்களுடன் மனம் விட்டு பேச முற்படுகிறீர்கள். பொதுவான சில காரியங்களில் ஈடுபட்டு உங்களுடைய ஆர்வத்தை காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் உங்களுக்கு ஒரு புது அனுபவம் கிடைக்கும்.

மகர ராசி நேயர்களே..!

கோபத்தை கட்டுப்படுத்த சில வழிகளை யோசிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்களால் ஆதாயம் உண்டு. சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைக்க நேரிடலாம்.

கும்ப ராசி நேயர்களே...!

இதுநாள் வரை கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த மோதல்கள் சற்று விலக நேரிடும். உங்களுக்கு உண்டான வேலைகளை விரைந்து முடிக்க செயல்படுவீர்கள். பணவரவு போதுமானதாக இருக்கும். மனைவி வழியில் உங்களுக்கு ஏற்ற நல்ல பலன் கிடைக்கும்.

மீனராசி நேயர்களே..!

செலவுகளை குறைக்க முடியாமல் மிகவும் திணறுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள் பால்ய நண்பர்களை சந்திக்க ஆசை கொள்வீர்கள்.