துலாம் முதல் மீனம் வரை ராசிப்பலன்...! 

துலாம் ராசி நேயர்களே...!

வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். தலைவலி ஏற்படும். பண விஷயத்தில் கொஞ்சம் கண்டிப்பாக இருப்பது நல்லது. அனாவசிய செலவுகளை தவிர்க்க வேண்டும்.

விருச்சிக ராசி நேயர்களே...!

உங்களுக்கு எப்போதும் குடும்பத்தாரின் ஆதரவு இருக்கும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். நீங்கள் நீண்ட நாட்களாக பார்க்க வேண்டும் என நினைத்து இருந்த ஒருவர் இன்று உங்களை சந்திக்க நேரிடலாம்.

தனுசு ராசி நேயர்களே...!

உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். குடும்ப விசேஷங்களை பக்கபலமாக இருந்து நடத்துவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்க வேண்டிய சூழல் ஏற்படும்.

மகர ராசி நேயர்களே..!

பிரச்சினைகளுக்கான காரணத்தை கண்டறிவீர்கள். பிள்ளைகளை நல்வழிப்படுத்த முற்படுவீர்கள். பல புண்ணிய தலங்களுக்கு சென்று குடும்பத்துடன் வழிபாடு செய்வீர்கள்.

கும்ப ராசி நேயர்களே..!

உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக சிந்தித்து செயல் படுவது நல்லது. வெளிவட்டாரத் தொடர்பு உங்களுக்கு அதிகரிக்கும். வர வேண்டிய பணத்தை போராடி பெறுவீர்கள்.

மீனராசி நேயர்களே..!

சுப நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் கலந்து கொள்ள முற்படுவார்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். காரியங்களை திட்டமிட்டு செயல்படுத்துவது குறித்து சிந்தித்து முடிவு எடுப்பீர்கள்.